Business Ideas For Housewives: இல்லத்தரசியாக இருப்பவர்கள், வீட்டு வேலைகள் மட்டும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனைவருக்குமே நிதி சுதந்திரம் என்பது இருக்க வேண்டிய ஒரு விஷயமாகும். நிதி சுதந்திரம் என்பது, ஒருவித முழுமை உணர்வை அனைவருக்கும் கொடுக்கவல்லதாகும். படித்தவர்கள் பலரும் ஒரு சில காரணங்களினால் தங்களது கெரியரில் இருந்து பிரேக் எடுத்து வீட்டில் இருப்பர். அப்படி, ஏதாவது சிறு தொழில் தொடங்க வேண்டும் என்ற யோசனையுடன் இருப்பவர்களுக்கான பிசினஸ் டிப்ஸ், இதோ.
வீட்டில் இருந்து உணவு தயாரிக்கும் தொழில்:
எப்போது ஆரம்பித்தாலும் சூடு பிடிக்கும் ஒரு தொழில், உணவு தொழிலாகும். வீட்டில் உணவு தயாரித்து வழங்குவது தற்போது பெரிய தொழிலாக வளர்ந்து வருகிறது. வீட்டில் தயாரித்த ஸ்நாக்ஸ், இனிப்புகள், ஊறுகாய், மசாலாக்கள் ஆகியவை நன்கு வருமானம் ஈட்டித்தரும் தொழிலாகும்.
கைவினைப்பொருட்கள் தொழில்:
இந்தியர்களுக்கு கைவினைப்பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இதற்கான மார்கெட்டும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. பாட்டர், ஆக்சிடைஸ்ட் நகைகள், பெயிண்டிங் என பல கைவினைப்பொருட்கள் பலரால் வாங்கப்படுகின்றன. இதற்கு தனித்திறமை இருந்தால் போதுமானது.
டெய்லரிங் மற்றும் Boutique கடைகள்:
பலருக்கு ஆடை தைப்பதற்கும், ஆடை வடிவமைப்பதற்கும் ஆர்வம் இருக்கும். இதற்கு சில கோர்ஸ்களும் உள்ளன. இதற்கும் இந்தியாவில் மார்கெட் உள்ளது. பலர், ரெடி மேட் ஆடைகளை தற்போது விரும்புவதில்லை. கையால் பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஆடைகளுக்கும் நன்றாக பிசினஸ் உள்ளன. டிசைனிங் ஆடைகள், கைத்தறி ஆடைகள் வடிவமைப்பு, ஆரி வர்க் என இதில் ஒரு வேலைக்கு பல ஆயிரம் லாபம் பார்க்கும் தொழில்கள் அதிகமாக உள்ளன.
மேலும் படிக்க | CBDT வரி செலுத்துவோருக்கு அளித்த நல்ல செய்தி: இந்த வரி வழக்குகள் மூடப்படும்!!
அழகுக்கலை நிபுணர்:
அழகுக்கலைக்கும் அழகு கலை நிபுணர்களுக்கும் இந்தியாவில் டிமாண்ட் உள்ளது. கல்யாண வீடுகள் முதல், டிவி நிகழ்ச்சிகளில் ஆங்கர்களுக்கு மேக் அப் போடுவது வரை அழகுக்கலை நிபுணர்கலின் ஆதிக்கம் இருக்கிறது. மெகந்தி போடுவது, ஸ்கின் கேர் செய்வது, ஃபேசியல், ஹேர் ஸ்டைல் என அனைத்தும் லாபம் பார்க்கும் கலைகள் ஆகிவிட்டது.
வீட்டில் வகுப்புகள் தொடங்குவது:
பிறருக்கு கற்றுக்கொடுக்கும் திறனும், அதற்கான அனுபவ அறிவும் இருந்தால் வீட்டில் டியூஷன் எடுக்கலாம். இல்லத்தரசிகள், அவர்களின் திறனுக்கு ஏற்றவாறு பள்ளி மாணவர்களில் குறிப்பிட்ட வகுப்பினருக்கு டியூஷன் எடுக்கலாம். இதற்கு ஒரு ஃபீசை நிர்ணயிக்கலாம்.
சமூக வலைதள மேலாளர்:
உலகளவில் டிஜிட்டல் மார்கெட்டிங்கிற்கும், ஆன்லைன் மார்கெட்டிங்கிற்கும் பெரிய வாய்ப்புகள் உள்ளது. ஒரு பிராண்டின் சமூக வலைதளங்களை பார்த்துக்கொள்பவர், சோசியல் மீடியா மேனஜர் எனப்படுகிறார். போஸ்ட் போடுவது, மக்களுக்கு தேவையான கண்டெட்ண்டை உருவாக்குவது, காபி ரைட் செய்வது, வெவ்வேறு தளங்களில் இந்த கணக்கை ப்ரமோட் செய்வது போன்றவை இவர்களின் வேலை ஆகும். இதற்கும் ஆன்லைனில் கோர்ஸ்கள் உள்ளன. இதற்கு லேப்டாப் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் இருந்தால், பெரிய ப்ளஸ்ஸாக அமையும்.
மேலும் படிக்க | டபுள் வருமானம், பணத்திற்கு 100% பாதுகாப்பு: அசத்தலான தபால் அலுவலக சேமிப்பு திட்டம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ