ரிசர்வ வங்கி அளித்த நல்ல செய்தி: UPI-இல் இனி இதையும் செய்ய அனுமதி

RBI on UPI: இந்திய ரிசர்வ் வங்கி, பரிவர்த்தனைகளுக்காக வங்கிகள் வழங்கும் ப்ரீ அப்ரூவ்ட் லோன் வசதிகளையும் UPI அமைப்பில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 5, 2023, 12:25 PM IST
  • ஏப்ரலில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸின் (யுபிஐ) வரம்பை விரிவுபடுத்த மத்திய வங்கி முன்மொழிந்தது.
  • UPI இல் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் என்றால் என்ன?
  • UPI உடன் கணக்கை இணைப்பது என்றால் என்ன?
ரிசர்வ வங்கி அளித்த நல்ல செய்தி: UPI-இல் இனி இதையும் செய்ய அனுமதி  title=

இந்திய ரிசர்வ் வங்கி: இந்திய ரிசர்வ் வங்கி, பரிவர்த்தனைகளுக்காக வங்கிகள் வழங்கும் ப்ரீ அப்ரூவ்ட் லோன் (முன்னதாகவே அங்கீகரிக்கப்பட்ட கடன்) வசதிகளையும் UPI அமைப்பில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது. இப்போது வரை டெபாசிட் தொகையை மட்டுமே UPI சிஸ்டம் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது இப்போது மாற்றப்படும். 

ஏப்ரலில் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸின் (யுபிஐ) வரம்பை விரிவுபடுத்த மத்திய வங்கி முன்மொழிந்தது. இதன் கீழ், வங்கிகளில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட கடன், அதாவது ப்ரீ அப்ரூவ்ட் லோன் வசதியிலிருந்து அல்லது அதற்கு பரிமாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

தற்போது, ​​சேமிப்பு கணக்குகள், ஓவர் டிராஃப்ட் கணக்குகள், ப்ரீபெய்ட் வாலட்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை UPI உடன் இணைக்க முடியும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் ஜாக்பாட், ரயில்வே தந்த மிகப்பெரிய அப்டேட்

'யுபிஐ மூலம் வங்கிகளில் முன் அனுமதி பெற்ற கடன் வசதியை இயக்குதல்' என்ற சுற்றறிக்கையை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, கடன் வசதிகளும் இப்போது யுபிஐ வரம்பில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளது. 

இந்த வசதியின் கீழ், தனிப்பட்ட வாடிக்கையாளரின் முன் ஒப்புதலுடன் திட்டமிடப்பட்ட வணிக வங்கியால் தனிநபர்களுக்கு வழங்கப்படும் முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி மூலம் பணம் செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது செலவைக் குறைக்கும் என்றும் இதன் மூலம் இந்திய சந்தைக்கான தனித்துவமான தயாரிப்புகளை உருவாக்க உதவி கிடைக்கும் என்றும் மத்திய வங்கி கூறியுள்ளது. மொபைல் சாதனங்கள் மூலம் 24 மணி நேரமும் உடனடி பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் UPI மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் ஆகஸ்ட் மாதத்தில் 10 பில்லியனைத் தாண்டியது. ஜூலை மாதத்தில் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 9.96 பில்லியனாக இருந்தது.

UPI இல் முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் என்றால் என்ன?

கடன் வாங்குபவர் எந்த நேரத்திலும் அணுகக்கூடிய முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பு இது. இது கிரெடிட் பேமெண்ட் போன்றது. இதன் கீழ், நுகர்வோர் கடனை வட்டியுடன் பிற்காலத்தில் திருப்பிச் செலுத்தலாம். இந்த வசதியைப் பெற UPI பயனர்கள் வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

UPI உடன் கணக்கை இணைப்பது என்றால் என்ன?

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது, ஒரே ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் பல வங்கிக் கணக்குகளை இணைக்கவும், ஐஎஃப்எஸ்சி குறியீடு அல்லது கணக்கு எண்ணை வழங்காமல் பணப் பரிமாற்றம் செய்யவும் பயனர்களை அனுமதிக்கும் கட்டண அமைப்பாகும். இது ஒரு நிகழ் நேர கட்டண முறையாகும் (ரியல் டை மேமெண்ட் சிஸ்டம்). அங்கு நிகழ் நேர அடிப்படையில் தொகை உடனடியாக வரவு வைக்கப்படும்.

கூடுதல் தகவல்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் இஎம்ஐ அடிப்படையிலான தனிநபர் கடன்களுக்கான மிதக்கும் வட்டி விகிதத்தை (Floating Interest Rates) மீட்டமைக்க புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் NBFCகள் உட்பட அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களும் (REs) கடன்களை அனுமதிக்கும் போது, ​​பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் கடன் பெறுபவர்களின் இஎம்ஐ (EMI), கடன் காலம் அல்லது இரண்டையும் பாதிக்கலாம் என்பதை அவர்களிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வங்கி கூறியது. வட்டி விகிதங்கள் காரணமாக இஎம்ஐ, கடன் காலம் அல்லது இரண்டிலும் மாற்றம் ஏற்பட்டால், கடன் வாங்கியவர்களுக்கு முறையான வழிகள் மூலம் உடனடியாகத் தெரிவிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு EPFO வெளியிட்டுள்ள முக்கிய செய்தி! உடனே இத பண்ணிடுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News