மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Jio Fiber என்றழைக்கப்படும் Jio GigaFiber வணீக வெளியீட்டு தேதியினை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவித்துள்ளது!
இந்த மாதம் நடைபெற்ற 42-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் (AGM) ரிலையன் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, Jio Fiber என்றழைக்கப்படும் Jio GigaFiber ஆனது தனது வணிக சேவைகளை செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்குவதாக தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து Jio Fiber சேவை குறித்த சந்தேகங்கள் மக்கள் மனதில் பயணித்து வருகிறது. குழப்பங்களில் தவிக்கும் மக்களுக்காக இந்த பதிவு.
Jio Fiber இணைப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
- https://gigafiber.jio.com என்ற வலைதள இணைப்பை பின் தொடரவும்.
- நீங்கள் JioFiber இணைப்பை அணுக விரும்பும் இடத்தில் உங்கள் முகவரியை (வீடு அல்லது அலுவலகம்) குறிப்பிடவும்
- பின்னர், உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை உள்ளிடவும், தொடர்ந்து திறக்கப்படும் மற்றொரு பக்கத்தில் கோரப்படும் விவரங்களை உள்ளிடவும்.
- இதனிடையே நீங்கள் பதிவு செய்ய வேண்டிய மொபைல் எண்ணில் OTP எண் பெறுவீர்கள், அதை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்
- OTP உறுதிசெய்யப்பட்டதும், மேலும் தேவைகளுக்கு Jio Fiber விற்பனை பிரதிநிதியிடமிருந்து நீங்கள் அறிவிப்பைப் பெறுவீர்கள்.
- Jio Fiber இணைப்பைப் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் (பின்வரும் பட்டியலிலிருந்து ஏதேனும் ஒன்றை) சமர்பிக்க வேண்டும்.
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- பான் அட்டை
- கடவுச்சீட்டு
- ஓட்டுனர் உரிமம்
---Jio Fiber -கட்டண விவரங்கள்---
அடிப்படை திட்டம் 100 MBPS வேகத்தில் தொடங்கி 1 GBPS வரை செல்லும், வாடிக்கையாளரின் பட்ஜெட்டைப் பொறுத்து மாதத்திற்கு ரூ .700 முதல் 10,000 வரை விலைகள் மாறுபடும்.
Jio Fiber ‘ஜியோ முதல் நாள் முதல் நிகழ்ச்சி(Jio First Day First Show)’ திட்டத்துடன் வரும், இதன் கீழ் Premium Jio Fiber வாடிக்கையாளர்கள் தியேட்டர்களில் வெளியான அதே நாளில் வீட்டிலேயே திரைப்படங்களைப் பார்க்கலாம். இந்த சேவை 2020 நடுப்பகுதியில் தொடங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Jio Fiber வரவேற்பு சலுகையின் ஒரு பகுதியாக, வருடாந்திர திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் - Jio Forever - முழு HD TV அல்லது Home PC மற்றும் 4K செட் டாப் பாக்ஸை முற்றிலும் இலவசமாகப் பெறுவார்கள்.