ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4%-மே தொடரும்: RBI

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு (MPC) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) தனது பணவியல் கொள்கை முடிவை அறிவித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 6, 2020, 01:55 PM IST
  • ரிசர்வ் வங்கி கடன் விகிதத்தை குறைக்காமல், 4 சதவீதம் என்ற முந்தைய அளவிலேயே விட்டுவிட்டது.
  • இது MPC-ன் 24 வது சந்திப்பாகும்.
  • பிப்ரவரி 2019 முதல் மொத்த விகிதம் 250 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4%-மே தொடரும்: RBI title=

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் (Reserve Bank) ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு (MPC) வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) தனது பணவியல் கொள்கை முடிவை அறிவித்தது. ரிசர்வ் வங்கி கடன் விகிதத்தை குறைக்காமல், 4 சதவீதம் என்ற முந்தைய அளவிலேயே விட்டுவிட்டது.

இது MPC-ன் 24 வது சந்திப்பாகும். மே 22 அன்று நடந்த இதற்கு முந்தைய பணவியல் கொள்கை சந்திப்பில், இந்திய ரிசர்வ் வங்கி எதிர்பாராத விதமாக ரெப்போ வீதத்தை (Repo Rate) 40 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 40 bps, 4% ஆக குறைத்தது. தலைகீழ் ரெப்போ வீதமும் (Reverse Repo Rate) 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 3.35% ஆனது.

இந்த இரண்டு சந்திப்புகளில் மொத்தமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 115 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், பிப்ரவரி 2019 முதல் மொத்த கொள்கை விகிதம் 250 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய் மற்றும் அடுத்தடுத்த லாக்டௌன்கள் காரணமாக பொருளாதாரத்திற்கு ஏற்படும் சேதத்தை குறைக்க மத்திய வங்கி விரைவான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ALSO READ: Fixed Deposit வட்டியிலேயே கணிசமாக சம்பாதிக்கலாம்: Where and How?

பணவீக்கத்தை 4 சதவீதமாக (+, - 2 சதவீதம்) வைத்திருக்க அரசாங்கம் ரிசர்வ் வங்கியை பணித்துள்ளது. உணவுப் பொருட்களின், குறிப்பாக இறைச்சி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளின் அதிக விலை, ஜூன் மாதத்தில் CPI அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தை 6.09 சதவீதமாக உயர்த்தின. ஜூலை மாத பணவீக்க விகிதம் ஆகஸ்ட் 12 அன்று அறிவிக்கப்படும்.

COVID-19 தொற்றுக்கு முன்பே பணவியல் கொள்கை ஒரு சாதகமான முறையில் இருந்தது. பிப்ரவரி 2019 முதல் கொரோனா தொற்றுநோய் தொடங்குவதற்கு இடையில் ஒட்டுமொத்தமாக 135 அடிப்படை புள்ளிகளுக்கான ரெப்போ வீதக் குறைப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ: எந்த வங்கி குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும்.. Top 10 வங்கிகளின் பட்டியல்!

Trending News