NSC, PPF, KVP, SSY... சிறுசேமிப்பு திட்டங்களின் சமீபத்திய வட்டி விகிதங்கள் இதோ

Small Saving Schemes: ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மதிப்பாய்வு செய்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 17, 2023, 11:28 AM IST
  • சிறு சேமிப்புத் திட்டம் என்றால் என்ன?
  • அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்.
  • சிறிய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள் என்ன?
NSC, PPF, KVP, SSY... சிறுசேமிப்பு திட்டங்களின் சமீபத்திய வட்டி விகிதங்கள் இதோ title=

சிறுசேமிப்ப்பு திட்டங்கள்: முதலீடு என்பது அனைவரது வாழ்விலும் ஒரு மிக முக்கியமான அம்சமாகும். இதில் ஆண்கள் பெண்கள் என்ற வித்தியாசம் இல்லை. அனைவருக்கும் பணத்தை சேமிப்பது போல, பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்து அதை பெருக்குவதும் மிக அவசியம். சமீபத்தில் டிசம்பர் காலாண்டிற்கான சேமிப்பு திட்ட வட்டி விகிதங்களின் அறிவிப்பு வெளியானது. இதில் ஐந்தாண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் உயர்த்தியது. மேலும் மற்ற அனைத்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களையும் அப்படியே பழைய அளவிலேயே தொடர்ந்தது. ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கம் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மதிப்பாய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு சேமிப்புத் திட்டம் என்றால் என்ன?

சிறு சேமிப்புத் திட்டங்கள் என்பது அரசாங்கத்தால் வழங்கப்பட்டு நிர்வகிக்கப்படும் முதலீட்டு திட்டங்கள் ஆகும்.  அவை தனிநபர்கள் செல்வத்தை சேமிக்கவும் பெருக்கவும் உதவுகின்றன. தற்போது, தொடர் வைப்புத்தொகை (RD), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY), மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC), கிசான் விகாஸ் பத்ரா (Kisan ikas Patra - KVP), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Saving Certificate - NSC), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உள்ளிட்ட ஒன்பது வகையான சிறு சேமிப்பு திட்டங்களை அரசாங்கம் வழங்குகிறது.

அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் பின்வருமாறு:

பிபிஎஃப் - 7.1%

எஸ்சிஎஸ்எஸ் - 8.2%

சுகன்யா சம்ரித்தி யோஜனா - 8.0%

என்எஸ்சி - 7.7%

அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் - 7.4%

கிசான் விகாஸ் பத்ரா - 7.5%

1-ஆண்டு வைப்பு - 6.9%

2 ஆண்டு வைப்பு - 7.0%

3 ஆண்டு வைப்பு - 7.0%

5 ஆண்டு வைப்பு - 7.5%

5 ஆண்டு RD - 6.7%

சிறிய சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் நன்மைகள் என்ன? 

பொருளாதார நிலையற்ற தன்மை இருக்கும் நிலையில், சிறு சேமிப்புத் திட்டங்களில் சில பகுதியை முதலீடு செய்வது, ஒரு நல்ல செயலாக இருக்கும். குறிப்பாக எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை பெற விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று தனி நபர் நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்தத் திட்டங்களுக்கான வருமானம் ஈக்விட்டிகளைப் போல லாபகரமானதாக இருக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஆனால், இவற்றில் இருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால், இவை அதிக ஆபத்து இல்லாத முதலீட்டு முறைகளாக உள்ளன.  

மேலும் படிக்க | கட்டணக் கொள்ளை அடிக்கும் பைக் டாக்ஸி சேவை நிறுவனங்கள்! ரத்து செய்ய கோரி போராட்டம்

சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூன்று நன்மைகள்

1) சிறு சேமிப்புத் திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன. எனவே முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் உறுதியான வருமானத்தை அனுபவிக்க முடியும்.

2) PPF மற்றும் SCSS போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் பல வருமான வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை பலன்களைப் பெறலாம். 

3) இந்த சிறு சேமிப்பு திட்டங்கள் உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்த நல்ல விருப்பங்களாக இருக்கும்.

மேலும் படிக்க | உங்கள் நிறுவனம் தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறதா? செக் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News