SpiceJet ticket rules: தனியார் துறை விமான நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், பயணத்திற்கு ஐந்து நாட்கள் முன் வரை பயணிகள், டிக்கெட்டின் தேதி அல்லது நேரத்தில் செய்யும் மாற்றங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது (Changing date and time of the ticket) என அறிவித்துள்ளது. முன்னதாக, பயணத்திற்கு ஏழு நாட்கள் முன் வரை டிக்கெட் தேதி அல்லது நேரத்தில் செய்யப்படும் மாற்றங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என கூறியிருந்தது.
புதிய அறிவிப்பின் கீழ், ஏப்ரல் 17 முதல் மே 10 வரை நேரடி உள்நாட்டு விமானங்களுக்கு ஏப்ரல் 17 முதல் மே 10 வரை டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் ஒரு முறை, மாற்றம் செய்ய கட்டண விலக்கு பெறலாம் என்று ஸ்பைஸ்ஜெட் சனிக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் COVID -19 தொற்று பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக குறிப்பிட்ட நேரம் அல்லது முழுமையான லாக்டவுன் செயல்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக பயணிகள் டிக்கெட்டுகளை ரத்து செய்ய நேர்ந்தால், அவர்களுக்கு இழப்பு ஏற்படும். பயணிகள் நிர்பந்தம் காரணமாக பயணத்தை மாற்றி அமைக்கும் போது அவர்களுக்கு இழப்பை ஏற்படுத்த விமான நிறுவனங்கள் விரும்பவில்லை. அதனால் தான் பயணத்தின் தேதி மற்றும் நேரத்தை கட்டணம் ஏதும் இல்லாமல் மாற்ற விலக்கு அளித்துள்ளன.
ALSO READ | உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போன்கள்; ஒரு அலசல்
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது அனைவரின் கவலைகளையும் அதிகரித்துள்ளது. மேலும், லாக்டவுன் அச்சம் காரணமாக, மக்கள் தங்கள் பயண தேதியை மாற்றி முன்கூட்டியே செல்லவும் விரும்புகின்றனர்.
கொரோனா தொற்று பாதிப்பு இது வரை இல்லாத அளவு அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள், தடுப்பூசி போடும் நடவடிக்கையை எடுப்பது உட்பட பல தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,61,500 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது. 18.01 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ALSO READ | கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் வேம்பு, கற்றாழை!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR