உங்களிடம் டிசிஎஸ் நிறுவன பங்குகள் இருக்கா? ஜாக்பாட் காத்திருக்கு ! TCS பைபேக் பாலிசி

TCS Share Price: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனம் டிசிஎஸ், அதன் பங்குகளை வாங்குவது தொடர்பாக அக்டோபர் 11 அன்று முடிவு எடுக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 7, 2023, 08:58 AM IST
  • டிசிஎஸ் பைபேக் பாலிசி
  • அக்டோபர் 11 அன்று முடிவு அறிவிக்கப்படும்
  • பங்குதாரர்களுக்கு லாபம் தரும் டிசிஎஸ்
உங்களிடம் டிசிஎஸ் நிறுவன பங்குகள் இருக்கா? ஜாக்பாட் காத்திருக்கு ! TCS பைபேக் பாலிசி title=

மும்பை: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. நிறுவனம் தனது பங்குகளை மீண்டும் திரும்ப வாங்கப் போகிறது. இது தொடர்பாக நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் அதன் பங்குகளை வாங்குவது தொடர்பாக அக்டோபர் 11 அன்று முடிவு எடுக்கப்படும், இன்னும் நான்கு நாட்களில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்பதால் பங்குச் சந்தையில் பல மாறுதல்கள் ஏற்படவிருக்கிறது.

உங்களிடம் டிசிஎஸ் (TCS Share Price) பங்குகள் இருந்தால், இப்போது அவற்றை விற்று நல்ல பணம் சம்பாதிக்கலாம். நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது பங்குகளை மீண்டும் வாங்கப் போகிறது. இது தொடர்பாக அக்டோபர் 11ம் தேதி முடிவு எடுக்கப்படும்.

TCS பங்கு நேற்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது

டிசிஎஸ் வாரியத்தின் முக்கியக் கூட்டம் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெறும் என்றும், அதில் பங்குகளை வாங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நேற்று (2023 October 6, வெள்ளிக்கிழமை) இந்நிறுவனத்தின் பங்கு 0.89 சதவீதம் உயர்ந்து ரூ.3,621.25 என்ற விலையில் நிறைவடைந்தது.

பங்குச் சந்தைக்கு தகவல் கொடுத்த டிசிஎஸ் நிறுவனம் 

அடுத்த வாரம் நடைபெறும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) இயக்குநர்கள் குழு கூட்டத்தில் பங்குகளை திரும்ப வாங்குவதற்கான முன்மொழிவு பரிசீலிக்கப்படும். டிசிஎஸ் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தைகளுக்கு ஒரு அறிவிப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | JFSL: இந்திய டிஜிட்டல் நிதிச் சேவைத் துறையிலும் ஆட்டத்தை தொடங்கும் முகேஷ் அம்பானி

18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை இந்நிறுவனம் வாங்கும்

டாடா குழும நிறுவனம் ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்குவதாக முன்னதாக அறிவித்திருந்தது. இந்த காலகட்டத்தில் ஒரு பங்கு ரூ.4,500 மதிப்புள்ள நான்கு கோடி பங்குகளை திரும்ப வாங்குவதாக கூறப்பட்டது. இந்த பங்குகள் மார்ச் 2022 இல் வெளியிடப்பட்டது.

நிறுவனம் 2022 இல் பங்குகளை திரும்ப வாங்கியது

இதற்கு முன்னர் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் அதன் பங்குகளை திரும்பப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, ​​சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான பங்குகள் திரும்பப் பெறப்பட்டது. ஒரு பங்கின் விலை 4,500 ரூபாயாக இருந்தது. அதேசமயம், ஒரு பங்கின் முகமதிப்பு ஒரு ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஃபோசிஸ் நிறுவனமும் பங்குகளை திரும்ப வாங்கியுள்ளது

2023 ஆம் ஆண்டில், மேலும் இரண்டு ஐடி நிறுவனங்கள் தங்கள் பங்குகளை திரும்பப் பெற்றுள்ளன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இன்ஃபோசிஸ் ரூ.9,300 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்ப வாங்கியது. அந்த நேரத்தில் நிறுவனம் ஒரு பங்கின் விலை 1543.1 ரூபாய்க்கு வாங்கியது. அதேசமயம் ஒரு பங்கின் அதிகபட்ச பைபேக் விலை ரூ.1,850 ஆக இருந்தது.

மேலும் படிக்க | ELSS: எந்த பங்கில் முதலீடு செய்தால், பங்குச் சந்தை லாபத்தை பணமாய் கொட்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News