78 டன் எடை கொண்ட machine-ஐ 32 பேர் ஊர்வலமாக அழைத்து வந்த நிஜக்கதை...

2019, ஜுலை 8ஆம் தேதியன்று நாசிக்கில் இருந்து 78 டன் எடையை ஏற்றிக் கொண்டு கிளம்பிய டிரக் இன்று திருவனந்தபுரத்தை வந்தடைந்தது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 19, 2020, 06:25 PM IST
78 டன் எடை கொண்ட machine-ஐ 32 பேர் ஊர்வலமாக அழைத்து வந்த நிஜக்கதை...   title=

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாரபாய் விண்வெளி மையத்தில் விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்காக கனரக, அதிநவீன இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்ட ஒரு டிரக் ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தை வந்தடைந்தது. 

"மகாராஷ்டிராவிலிருந்து 2019 ஜூலை 8 ஆம் தேதி டிரக்கை கிளப்பினோம். ஒரு வருடமாக நான்கு மாநிலங்களைக் கடந்து பயணித்து தற்போது திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.   இன்று VRCCயில் சரக்குகளை ஒப்படைத்து விடுவொம் என்று நம்புகிறோம்" என்று சரக்குகளுடன் பயணித்த ஊழியர் ஒருவர் ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். 

இந்த டிரக்கில் Aerospace Horizontal Autoclave கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த கனரக இயந்திரமானது எடை இல்லாத பொருட்களைத் தயாரிக்க பயன்படுகிறது. இந்த கனரக இயந்திரமானது மகாராஷ்டிராவில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள Vikram Sarabhai Space Centre கொண்டு வர திட்டமிடப்பட்டு, ஓராண்டுக்கு முன்பு பயணத்தைத் தொடங்கியது. 

நான்கு மாநிலங்கள் வழியாக ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரம் என்ற வேகத்தில் பயணித்த டிரக் ஒரு வழியாக திருவனந்தபுரத்தை வந்தடைந்தது. இந்த பிரம்மாண்ட டிரக்குடன் 32 ஊழியர்கள் பயணித்தனர்.  

Read Also | சரக்கு சேவையை தொடங்கியது ஒடிசாவின் பாரதீப் துறைமுகம்

இந்த பிரம்மாண்டமான கனரக இயந்திரம் சுமார் 70 டன் எடை கொண்டது.  இந்த மாபெரும் இயந்திரத்தின் உயரம் 7.5 மீட்டர், அகலம் 6.65 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவின் நாசிக் (Nashik) நகரத்தில் உள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரமானது, விரைவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டத்திற்கான பொருட்களை தயாரிக்கத் தொடங்கும்.

"இவ்வளவு பெரிய இயந்திரத்தை தூக்க கயிறுகளைப் பயன்படுத்துகிறோம். இது முன்புறமும், பின்புறமும் தலா ஒரு axle-ஆல் இழுக்கப்படுகிறது. இரண்டு அச்சுக்களிலுமே (axles) தலா 32 சக்கரங்கள் உள்ளன. இதை இழுக்கப் பயன்படுத்தும் puller-இல் 10 சக்கரங்கள் உள்ளன.  Drop deck மட்டும் 10 டன் 

எடை கொண்டதாகும். இந்த இயந்திரத்தின் எடை 78 டன். இந்த ராட்சத இயந்திரத்தின் எடையையும் இரண்டு axle-களும் சமமாக சுமக்கிறது" என்று கனரக இயந்திரத்தை எவ்வாறு கொண்டு வந்தோம் என்ற கதையை சொல்கின்றனர் ஊழியர்கள்... 

Trending News