இந்த 5 பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் ஜாக்கிரதை!! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!!

Income Tax Notice: சில உயர் பரிவர்த்தனைகள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கலாம். இவற்றால் உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீசும் அனுப்பலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 31, 2024, 02:41 PM IST
  • வங்கிக் கணக்கில் வைப்பு.
  • நிரந்தர வைப்புத்தொகையில் செய்யப்படும் டெபாசிட்.
  • பெரிய சொத்து பரிவர்த்தனைகள்.
இந்த 5 பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் ஜாக்கிரதை!! வருமான வரி நோட்டீஸ் வரலாம்!! title=

Income Tax Notice: இன்றைய உலகம் டிஜிட்டல் உலகம். இன்று அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. எனினும், இன்றும் பலருக்கு பண பரிவர்த்தனையே எளிதாகவும் சிறப்பாகவும் இருக்கின்றது. இருப்பினும், பலர் வருமான வரித்துறையின் கண் பார்வையில் படாமல் இருக்க விரும்புவதாலும் பண பரிவர்த்தனைகளை செய்கிறார்கள். நாம் ஷாப்பிங் செய்யும்போதோ, பிற இடங்களிலோ ஒரு குறிப்பிட்ட அளவு ரொக்கமாக பணத்தை செலவு செய்தால் தவறு அல்ல. 

எனினும், சில உயர் பரிவர்த்தனைகள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கலாம். இவற்றால் உங்களுக்கு வருமான வரித்துறை (Income Tax Department) நோட்டீசும் அனுப்பலாம். நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய 5 அதிக மதிப்புள்ள பண பரிவர்த்தனைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

வங்கிக் கணக்கில் வைப்பு (Bank Deposits)

மத்திய நேரடி வரிகள் வாரியமான (Central Board of Direct Taxes) CBDT விதிகளின்படி, ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அது குறித்த தகவல் வருமான வரித்துறைக்கு அளிக்கப்படும். இந்தப் பணம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம். நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமான பணத்தை டெபாசிட் செய்வதால், இந்த பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறை உங்களிடம் கேட்கக்கூடும். 

நிரந்தர வைப்புத்தொகையில் செய்யப்படும் டெபாசிட் (Fixed Deposits)

ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்திற்கு மேல் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் போது கேள்விகள் எழுவது போல், எஃப்.டி -இலும் ஒரு குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக டெபாசிட் செய்தால் பிரச்சனை வரலாம். ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எஃப்.டி கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டு, இதன் மேல், வருமான வரித்துறைக்கு ஏதேனும் சந்தேகம் வந்தால், வருமான வரித் துறை உங்களிடம் பணத்தின் ஆதாரம் குறித்து விசாரிக்கலாம்.

மேலும் படிக்க | ஓட்டுநர் உரிமம், சிலிண்டர் விலை, ஆதார், கார் விலை..... ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

பெரிய சொத்து பரிவர்த்தனைகள் (Big property transactions)

சொத்து வாங்கும் போது ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்திருந்தால், சொத்து பதிவாளர் கண்டிப்பாக இது குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவிப்பார். இதுபோன்ற தருணங்களில், பெரிய அளவிலான பரிவர்த்தனை காரணமாக, பணம் வந்ததற்கான மூலம் குறித்து வருமான வரித்துறை கேட்கலாம்.

கிரெடிட் கார்டு கட்டணம் (Credit Card Bill)

உங்கள் கிரெடிட் கார்டு பில் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், அதை நீங்கள் ரொக்கமாக செலுத்தினால், அந்த பணத்தின் ஆதாரம் பற்றி உங்களிடம் கேட்கப்படலாம். மறுபுறம், ஒரு நிதியாண்டில் நீங்கள் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் செலுத்தினால், உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று வருமான வரித்துறை உங்களிடம் கேள்வி கேட்கலாம்.

பங்குகள், மியூசுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்களை வாங்குதல் (Buying shares, mutual funds, debentures or bonds)

பங்குகள், மியூசுவல் ஃபண்டுகள், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்கள் வாங்க அதிக அளவு பணம் பயன்படுத்தப்பட்டால், வருமான வரித் துறை (Income Tax Department) எச்சரிக்கப்படுகின்றது. ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அது குறித்த தகவல் வருமான வரித்துறைக்கு சென்றடைகிறது. இந்த சமயங்களில் இதற்கான பணம் எங்கிருந்து கிடைத்தது என உங்களிடம் கேட்கப்படலாம். 

மேலும் படிக்க | 8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News