Big Changes From June 1 2024: ஜூன் மாதம் நாளை பிறக்கவுள்ளது. ஜூன் 2024 முதல் நாட்டில் முக்கிய சில விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். நாளை முதல் ஏற்படவுள்ள விதி மாற்றங்களால் உங்கள் பாக்கெட்டிலும் அன்றாட செயல்முறைகளிலும் பல மாற்றங்கள் ஏற்படக்கூடும். இந்த மாற்றங்கள் குறித்த புரிதல் உங்களுக்கு இல்லையென்றால் நீங்கள் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடலாம். சில சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ளலாம். ஆகையால், மாதம் துவங்கும் முன்னர் இந்த விதி மாற்றங்களை பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.
ஜூன் 1 முதல் மாறவுள்ள முக்கிய விதிகளின் விவரம் இதோ:
ஓட்டுநர் உரிமத்திற்கான புதிய விதிகள்:
புதிய ஓட்டுநர் உரிம விதிகள் (New Driving License Rules 2024) அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வருவதால் ஜூன் 1 முதல் போக்குவரத்து விதிகளும் மாற்றப்பட உள்ளன. புதிய விதிகள் கடுமையானவையாக இருக்கும். மேலும் இவற்றில் விதிக்கப்படும் அபராதமும் அதிகமாக இருக்கும்
ஜூன் 1, 2024 முதல் இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் தொடர்பான பல முக்கியமான மாற்றங்கள் நடக்கவுள்ளன. ஜூன் 1 முதல் ஓட்டுநர் உரிமம் பெற மக்கள் அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற வேண்டியதில்லை. இந்த செயல்முறையை எளிதாக்கும் வகையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய விதிகளை அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமத்துக்காக (Driving License) விண்ணப்பிக்கும் நபர்கள் இப்போது RTO க்கு பதிலாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் தங்கள் ஓட்டுநர் தேர்வை அளிக்கலாம். இந்த மையங்களில் உரிமத் தகுதிக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
ஆதார் பான் மற்றும் டிடிஎஸ்:
பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை 31 மே 2024க்குள் இணைப்பது கட்டாயமாகும். வருமான வரித் துறை (Income Tax Department) வரி செலுத்துவோர் தங்கள் பான் கார்டை (PAN Card) ஆதார் அட்டையுடன் (Aadhaar Card) 31 மே 2024க்குள் இணைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தேதிக்குள் இணைக்காதவர்கள் அதிக டிடிஎஸ் (TDS) செலுத்த வேண்டி இருக்கும்.
மேலும் படிக்க | 8th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோ
கிரெடிட் கார்ட் புதிய விதிகள்:
ஜூன் 1 முதல் எஸ்பிஐ (SBI) கிரெடிட் கார்டு விதிகள் மாறுகின்றன. ஜூன் 2024 முதல் சில கிரெடிட் கார்டுகளுக்கான அரசு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு வெகுமதி புள்ளிகள் பொருந்தாது என்று எஸ்பிஐ கார்டு கூறியுள்ளது. இந்த வசதி நிறுத்தப்படும் SBI கிரெடிட் கார்டுகளில் Aurum, SBI Card Elite, SBI Card Elite Advantage மற்றும் பல உள்ளன.
எல்பிஜி சிலிண்டர் விலை:
எல்பிஜி சிலிண்டர் விலை (LPG Cylinder Price) ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி புதுப்பிக்கப்படுகின்றது. அதெ போல் ஜூன் 1 ஆம் தேதியும் இவை புதுப்பிக்கப்படும். மே 2024 இல், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வணிக சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்தன. மேலும் ஜூன் மாதத்தில் சிலிண்டர் விலைகள் மீண்டும் குறையலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் புதுப்பிப்பு:
ஆதார் (Aadhaar) புதுப்பிப்புக்கான ஒரு முக்கியமான அப்டேட் உள்ளது. UIDAI, ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதிக்கான காலக்கெடுவை ஜூன் 14 வரை நீட்டித்துள்ளது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் எளிதாக புதுப்பிக்கலாம். ஆனால், ஆஃப்லைனில் அப்டேட் செய்தால், அதாவது ஆதார் மையத்திற்குச் சென்று புதுப்பித்தால், ஒரு அப்டேட்டுக்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
கார்களின் விலை அதிகரிக்கும்:
உலகின் சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கார்களின் விலையை 2 சதவீதம் உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜூன் 1, 2024 முதல், வாடிக்கையாளர்கள் ஆடி கார்களை வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டி இருக்கும். உள்ளீடு செலவுகள் அதிகரித்ததே, கார்களின் விலையை உயர்த்துவதற்கான காரணம் என்று நிறுவனம் கூறியுள்ளது. 23-24 நிதியாண்டில், ஆடி இந்தியா மொத்தம் 7027 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நிதியாண்டில் கார் விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ