இந்திய வங்கிகளின் (Banking sector) லாபம் முதல் முறையாக மூன்று லட்சம் கோடிகளைத் தாண்டியுள்ளதை பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் தெரிவித்துள்ளார். தாங்கள் ஆட்சிக்கு வந்த போது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த வங்கிகள் இன்று லாபமீட்டும் நிலைக்கு சென்றிருப்பதை பெருமையுடன் டிவிட்டர் செய்தியில் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த செய்தியில், ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், சிறு குறு தொழில் முனைவோருக்கும் வங்கிகள் கடன் வழங்க இது உதவியாக இருக்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
In a remarkable turnaround in the last 10 years, India's banking sector net profit crosses Rs 3 lakh crore for the first time ever.
When we came to power, our banks were reeling with losses and high NPAs due to the phone-banking policy of UPA. The doors of the banks were closed…
— Narendra Modi (@narendramodi) May 20, 2024
பொதுத்துறை வங்கிகள் சென்ற ஆண்டை விட 34% அதிக லாபத்தை பதிவு செய்து ரூ 1.4 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன என்றால், தனியார் வங்கிகள்: ரூ 1.7 லட்சம் கோடி லாபம் பெற்றுள்ளன. தனியார் வங்கிகளில் லாபம் சென்ற ஆண்டை விட 42 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை ஐடி நிறுவனங்கள் தான் அதிக லாபத்தை ஈட்டி வந்தன என்பதும், தற்போது முதல் முறையாக வங்கிகள் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டிபோட்டு லாபம் சம்பாதித்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் மக்களுக்கு சேவையாற்றுகின்றன என்று சொல்லும் நிலையில், அவை எவ்வாறு லாபம் ஈட்டுகின்றன? தெரிந்துக் கொள்வோம். உண்மையில், வங்கிகள் மக்களுக்கு சேவைகளை வழங்கினாலும், லாபம் சார்ந்த வணிக மாதிரியில் இயங்குகின்றன. பிற வணிகங்களைப் போலவே, வருமானம் மற்றும் செலவுகளுக்கு தங்கள் வணிகத்தையே நம்பியுள்ளன. வங்கிகளின் செயல்பாடுகளில் கடன் வாங்குதல் மற்றும் கடன் கொடுப்பது ஆகியவையே பிரதானமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வங்கிகள் பணம் சம்பாதிப்பது தொடர்பான விஷயங்களில் அடிப்படையானவற்றைத் தெரிந்துக் கொள்வோம்.
வங்கிகள் லாபம் ஈட்டும் வழிகள்
வட்டி
வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, கொடுக்கும் கடன்களுக்கு அதிக வட்டிகளை வசூலிக்கின்றன. இந்த வட்டி விகிதங்களில் உள்ள வித்தியாசத்தை நிகர வட்டி வரம்பு என்று சொல்வார்கள். வங்கிகளின் வருவாய்க்கு நிகர வட்டியானது முக்கியமானதாக உள்ளது.
இதற்கு உதாரணமாக உங்கள் வங்கி உங்களுக்குக் கொடுக்கும் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் எஃப்.டிக்களின் வட்டி விகிதம் குறைவாக இருப்பதைக் குறிப்பிடலாம். அதுவே, வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், கார் கடன்கள் மற்றும் பிற பல்வேறு வகையிலான கடன்களுக்கான வட்டிகள் அதிகமாக இருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
பரிமாற்றக் கட்டணம்
டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது விதிக்கப்படும் கட்டணம், இதுபோன்ற கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் ஆகியவற்றின் மூலமும் வங்கிகள் வருவாய் ஈட்டுகின்றன. அதேபோல், பிற வங்கிகளின் வாடிக்கையாளர்கள், தங்களுடைய ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும்போது வசூலிக்கும் கட்டணமும், வங்கிகளுக்கு லாபம் தான். நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி வீட்டு ஏடிஎம்களில் பரிவர்த்தனை செய்வதற்கான கட்டணமும் வங்கிகளின் லாபக்கணக்கிற்கு வந்து சேருகின்றன.
குறைந்தபட்ச இருப்பு கட்டணம்
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்காவிட்டால், அதற்காக மாதந்தோறும் வசூலிக்கப்படும் அபராதமும், கடன் செலுத்த தாமதமானால் வசூலிக்கப்படும் அபராதமும் வங்கியின் வருவாயாக மாறுகிறது. இவற்றைத் தவிர, முதலீட்டின் மீதான வட்டி மூலமும் வங்கிகள் வருமானம் ஈட்டுகின்றன.
வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் அரசு மற்றும் குறிப்பிட்ட சில பத்திரங்களில் முதலீடு செய்யும்போது கிடைக்கும் வட்டியும் லாபம் தான்.
அந்நிய செலாவணி
அந்நிய செலாவணி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது கிடைக்கும் வருமானமும், மூன்றாம் தரப்பு தயாரிப்புகளில் இருந்து கிடைக்கும் கமிஷனும் வங்கிகளுக்கு வருவாயைக் கொடுக்கின்றன. தற்போது வங்கிகளும் காப்பீடு பாலிசிகளை வழங்குகின்றன. இந்த வணிகத்தின் மூலமும் வங்கிகளுக்கு லாபம் கிடைக்கிறது. வங்கிகள் லாபத்தை சம்பாதிக்கும்போது, பல்வேறு செலவுகளையும் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டியிருக்கிறது.
அவை நிலையான செலவுகளாக இருக்காது, அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். இதுபோன்ற செலவுகள் வங்கிகளின் லாபத்தை கணிசமாக குறைக்கும். இதற்கு உதாரணமாக, விளம்பரங்களைச் சொல்லலாம். வங்கிகள் பல்வேறு ஊடகங்களில் செய்யும் விளம்பரங்களுக்கான செலவு கணிசமானவையாக இருக்கின்றன.
மேலும் படிக்க | மாதம் இரண்டரை லட்சம் ஓய்வூதியம் பெற சூப்பர் ஐடியா! புத்திசாலித்தனமான முதலீடு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ