எஸ்பிஐ Vs போஸ்ட் ஆபிஸ் ஆர்டி: சம்பளம் வாங்கும் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு முதலீட்டுக்காக ஒரே நேரத்தில் அதிக அளவு பணத்தை எடுப்பது சற்று கடினம். இதற்கு பதிலாக அவர்கள் தங்களின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் பணத்தை சேமித்து, அதை சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார். அத்தகையவர்களை மனதில் வைத்து, தொடர் வைப்புத்தொகை அதாவது RD உருவாக்கப்பட்டது. இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் (RD) பணத்தை முதலீடு செய்வீர்கள், பிறகு உங்களுக்கு இதில் நிலையான வட்டி கிடைக்கும். Recurring Deposit என்பது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை சேமிப்பது. இதற்கான கணக்கை நாம் வங்கியிலோ, தபால் நிலையங்களிலோ தொடங்கலாம். அதன்படி அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமான ஆர்.டி சிறந்ததா அல்லது எஸ்.பி.ஐ வங்கியில் வழங்கப்படும் ஆர்.டி சிறந்ததா என்று இந்த பதிவில் இன்று நாம் தெரிந்துக்கொள்ளப்போகிறோம்.
எஸ்பிஐ ரெக்கரிங் டெபாசிட் (SBI Recurring deposits):
எஸ்பிஐ ஒரு வருடம் முதல் பத்து ஆண்டுகள் வரை ஆர்டியை வழங்குகிறது. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.100 முதல் செலுத்தி உங்கள் RD கணக்கைத் தொடங்கலாம். மேலும் SBI வாடிக்கையாளர்களுக்கு 6.5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 7 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரையிலும் தொடர்ச்சியான வைப்புத்தொகைகளுக்கு வட்டி வழங்குகிறது. இந்த வட்டிக் கட்டணங்கள் கடந்த 15 பிப்ரவரி 2023 முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ரயில்வே வெளியிட்ட செம டூர் பேக்கேஜ்.. இதோ அப்டேட்
எஸ்பிஐ ஆர்டி வட்டி விகிதங்கள்:
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 6.80% வட்டி வழங்கப்படுகிறது. அதே சமயம் மூத்த குடிமக்களுக்கு 7.30% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 7% வட்டி வழங்கப்படுகிறது. அதே சமயம் மூத்த குடிமக்களுக்கு 7.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
3 ஆண்டுகள் முதல் 5 வயது வரையிலான டெபாசிட்டுக்கு 6.50% வட்டி வழங்கப்படுகிறது. அதே சமயம் மூத்த குடிமக்களுக்கு 7.00% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுக்கு 6.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீத வட்டி வட்டி வழங்கப்படுகிறது.
தபால் அலுவலகம் ரெக்கரிங் டெபாசிட் (Post Office RD):
தபால் அலுவலக RD 5 வருட மெச்சூரிட்டி காலத்துடன் வருகிறது. அஞ்சல் அலுவலக RD திட்டம் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டியின் பலனை வழங்காது. இந்த கட்டணங்கள் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தபால் அலுவலகம் RD வட்டி விகிதங்கள்:
5 ஆண்டு வரையிலான டெபாசிட்டுக்கு RD - 6.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
RD வட்டிக்கு வரி விதிக்கப்படுகிறது:
தொடர்ச்சியான டெபாசிட்டுகளில் வழங்கப்படும் வட்டிக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படும். நீங்கள் ஈட்டும் RD வட்டியில் 10 சதவீதம் TDS பிடித்தம் செய்யப்படும். அதே நேரத்தில், தொடர் வைப்புத்தொகையில் பெறப்படும் வட்டி ரூ.10,000க்கு மேல் இருந்தால் TDS கழிக்கப்படும்.
SBI RD vs Post office RD எது பெஸ்ட்:
எஸ்பிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு ஆர்டிக்கு அதிக வட்டியை வழங்குகிறது. இங்கு முதலீடு செய்வது லாபகரமான ஒப்பந்தமாக இருக்கும். அதே நேரத்தில், பொது மக்கள் ஒன்று அல்லது 2 ஆண்டுகள் RD இல் முதலீடு செய்தால், SBI அதிக வட்டி அளிக்கிறது.
மேலும் படிக்க | 7th Pay Commisison: மத்திய ஊழியர்களுக்கு வந்தாச்சி குட் நியூஸ், DA 5% அதிகரிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ