ஆதார் எண்ணை அஞ்சல் அலுவலக கணக்குகளுடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

Aadhaar Update In Post Office Accounts: வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 28, 2023, 08:56 AM IST
  • ஆதார் எண் கட்டாயம்
  • அஞ்சலக வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு
  • ஆதார் எண் கட்டாயம் என அஞ்சல் துறை உத்தரவு
ஆதார் எண்ணை அஞ்சல் அலுவலக கணக்குகளுடன் இணைக்காவிட்டால் என்ன ஆகும்? title=

ஆதார் கட்டாயம்: அஞ்சல கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பினை அஞ்சல்துறை வெளியிட்டுள்ளது. மக்களின் தேவையை கருத்தில் கொண்டு தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக, வாடிக்கையாளர்கள் கட்டாயம் தங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை கணக்குடன் இணைக்க வேண்டும் என அஞ்சல் துறை உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும் என்றும் இந்திய அஞ்சல் துறை சேமிப்பு கணக்குடன் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த விதிமுறையை அனைத்து வாடிக்கையாளர் கடைபிடிக்க வேண்டும் வேண்டும் என்றும், இல்லாவிட்டால், அவர்களது சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட்டு விடும் என்று மத்திய அரசு எச்சரித்திருக்கிறது.

இதன் அடிப்படையில் அஞ்சலக சிறுசேமிப்புக் கணக்குத் திட்டம் வைத்திருப்பவர்கள், தங்கள் பரிவர்த்தனைகளுக்குக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க வேண்டுமானால், ஒரு மாதத்துக்குள் அவர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை தங்கள் கணக்குகளுடன் இணைக்குமாறும் அஞ்சல் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க | ஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே இதனை அப்டேட் பண்ணுங்க! பணம் இழக்கும் அபாயம்!

தபால் நிலைய சேமிப்பு தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை
பில் செலுத்துதல், வீட்டு வாசல் வங்கிச் சேவைகள், IMPS மூலம் உடனடி பணப் பரிமாற்றம் மற்றும் பிற பணம் அனுப்பும் சேவைகள் போன்ற சேவைகளை தபால் நிலையத்தில் பெறலாம். கூடுதலாக, விர்ச்சுவல் டெபிட் கார்டு, க்யூஆர் கார்டு, ஃபோன் பேங்கிங், எஸ்எம்எஸ் பேங்கிங், இலவச காலாண்டு அறிக்கைகள் எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள் ஆகியவை தபால் அலுவலகத்தில் உள்ள சேமிப்புக் கணக்குகளில் உண்டு.

அஞ்சலக சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் தகுதி உடையவர்கள்
10 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் வழக்கமான சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். ஆனால், செல்லுபடியாகும் KYC ஆவணங்கள் இருக்க வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்கு
அஞ்சலகத்தில் குறிப்பிட்ட தயாரிப்பு வகையின் கீழ் ஒரு கணக்கை மட்டுமே வைத்திருக்க முடியும்.

கூட்டு வழக்கமான சேமிப்புக் கணக்கு
அஞ்சலக சேமிப்பு தொடர்பான கணக்கு ஒருவரின் பெயரில் மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதால் கூட்டு சேமிப்புக் கணக்கைத் திறக்க முடியாது.

மேலும் படிக்க | NPS கணக்கில் யாரை நாமினி ஆக்கலாம்? நாமினிகளை புதுப்பிக்க லேட்டஸ்ட் அப்டேட்

OVDகள் என்றால் என்ன?

அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களில் (OVDகள்), பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, UIDAI வழங்கிய ஆதார் எண் மற்றும் மாநில அரசு அதிகாரி கையொப்பமிட்ட NREGA மூலம் வழங்கப்பட்ட வேலை அட்டை ஆகியவை அடங்கும்.

வழக்கமான சேமிப்புக் கணக்கிற்கு நியமன வசதி
வழக்கமான சேமிப்புக் கணக்கிற்கு நாமினேஷன் எனப்படும் நியமன வசதி உண்டு.

தபால் அலுவலக கணக்கைத் திறக்க குறைந்தபட்ச வைப்புத் தொகை
அஞ்சல சேமிப்புக் கணக்கை குறைந்தபட்ச வைப்புத் தொகையுடன் தொடங்கலாம்.

நிதி மோசடி மற்றும் அடையாள திருட்டு அதிகமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், நமது தனிப்பட்ட தகவல் மற்றும் பணத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. ஆதார் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தங்கள் பணத்தை பாதுகாக்க ஒரு முக்கியமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் ஆதார் அட்டையை அனைத்து கணக்குகளுடன் இணைக்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது.

மேலும் படிக்க | Investment Idea: உடல் எடை குறைப்பு மருந்து தயாரிப்பு நிறுவன பங்குகளில் முதலீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News