பணவீக்கத்தை தாண்டி பலன் தரும் முதலீடு எது … வங்கி வட்டி குறைந்ததால் முதியவர்கள் கவலை

வங்கியில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்ற எண்ணம் உள்ளதால், அதற்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதிலும், மூத்த குடிமகன்களுக்கு வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகள் மீது ஈர்ப்பு அதிகம்.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 17, 2020, 08:16 PM IST
  • பண வீக்கத்தை காரணம் காட்டி வட்டியை குறைக்க ரிசர்வ் வங்கி கெடுபிடி காட்டியபோது, சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி ஓரளவு அதிகமாகவே இருந்தது.
  • வங்கிகளில் 2016ம் ஆண்டு முதல் எம்சிஎல்ஆர் முறையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது.
  • பண வீக்கத்தை தாண்டி பலன் தர வேண்டும். அதுதான் நல்ல முதலீடு. ஆனால், இன்று எந்த ஒரு சேமிப்பு திட்ட வட்டியும் இவ்வாறு பலன் தரும் வகையில் இல்லை.
பணவீக்கத்தை தாண்டி பலன் தரும் முதலீடு எது … வங்கி வட்டி குறைந்ததால் முதியவர்கள் கவலை

வங்கி பிக்சட் டெபாசிட்டுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதிலும், மூத்த குடிமகன்களுக்கு வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகள் மீது ஈர்ப்பு அதிகம். காரணம், ரிஸ்க் இல்லை. போதுமான லாபம் கிடைக்கும். இதனால்தான் பெரும்பாலான முதியவர்கள் பணி ஓய்வு பெற்றதும் தங்களுக்கு கிடைத்த பணிக்கொடையை (கிராஜூவிட்டி) அப்படியே கொண்டுபோய் வங்கி வைப்பு நிதிகளில் முதலீடு செய்வார்கள். எல்லா டெபாசிட் திட்டங்களிலும் முதியோருக்கு குறிப்பிட்ட சதவீதம் கூடுதலாகத்தான் வட்டி நிர்ணயித்திருப்பார்கள். ஆனால், தற்போது வங்கி மற்றும் சிறு சேமிப்பு டெபாசிட்களில் வட்டி மிகவும் குறைந்து விட்டது.

பண வீக்கத்தை காரணம் காட்டி வட்டியை குறைக்க ரிசர்வ் வங்கி கெடுபிடி காட்டியபோது, சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி ஓரளவு அதிகமாகவே இருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை

குறைக்க துவங்கிய பிறகு, வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் குறைந்தன.

ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்துகிறது. அதில் வட்டி விகிதம் மற்றும் முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் தொடர்ந்து 2 கூட்டங்களில் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியை 1.15 சதவீதம் குறைத்தது. இத்துடன் சேர்த்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து 2.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை. தற்போது, ரெப்போ வட்டி 4 சதவீதமாக உள்ளது.

வங்கிகளில் 2016ம் ஆண்டு முதல் எம்சிஎல்ஆர் முறையில் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது. அதாவது, வங்கிகள் டெபாசிட்களுக்கு எவ்வளவு வட்டி வழங்குகிறதோ, அதை விட அதிகமாக எம்சிஎல்ஆர் விகித வட்டி நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

அதன்பிறகு, சந்தை அடிப்படையிலான வட்டி விகிதத்தை வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. இந்த நடைமுறையில் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி அல்லது அரசு கடன் பத்திரங்களுக்கான வட்டி அடிப்படையில் கடன் வட்டி நிர்ணயிக்கப்படும். இதனால்தான், ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க துவங்கியது.

ALSO READ | தங்கத்தை நகையாக வாங்குவது வேஸ்ட்.... தங்கத்தை முதலீடு செய்ய Mutual fund தான் பெஸ்ட்...!!!

இவ்வாறு கடன் வட்டி குறைவதால் வீடு, வாகன கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் பலன் அடைந்தனர். அதேநேரத்தில், இதற்கேற்ப டெபாசிட் வட்டிகளையும் வங்கிகள் குறைக்க வேண்டி வந்தது. இதுேபால் அஞ்சலக சேமிப்பு திட்டங்களிலும் வட்டி அதிரடியாக குறைக்கப்பட்டது. இதனால் முதலில் பாதிக்கப்பட்டது மூத்த குடிமகன்கள்தான்.

 பண வீக்கத்தை தாண்டி பலன் தர வேண்டும். அதுதான் நல்ல முதலீடு. ஆனால், இன்று எந்த ஒரு சேமிப்பு திட்ட வட்டியும் இவ்வாறு பலன் தரும் வகையில் இல்லை. கடந்த வாரம் வெளியிட்ட மத்திய அரசின் புள்ளி விவரப்படி, ஜூலை மாதத்துக்கான சில்லரை விலை பண வீக்கம் 6.93 சதவீதமாக உள்ளது. இது ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கான 6 சதவீதத்தை விட மிகவும் அதிகம். பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள மூத்த குடிமகன்களுக்கான டெபாசிட் திட்டத்தில் 5 ஆண்டு பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி 6.2 சதவீதம் வழங்கப்படுகிறது. இது தற்போதைய பண வீக்க அளவை விட மிக குறைவுதான். ஆண்டு வருவாய் அதிகமாக இருந்து, ஆதாய வரி விதிக்கப்பட்டால் வட்டி பலன் மிகவும்குறைந்து விடும். இதனால், துணிகர முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் மூத்த குடிமகன்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ALSO READ | பிரதமர் அறிவித்துள்ள வருமான வரி தொடர்பான புதிய சட்ட விதிகள் கூறுவது என்ன..!!!

 

 உதாரணமாக, பங்குச்சந்தையுடன் தொடர்புடைய மியூச்சுவல் பண்ட்கள் பல, வங்கி வட்டி விகிதத்தை விட அதிக பலன் தருபவைதான். ஆனால், தற்போதைய சந்தை நிலை ஸ்திரமானதாக இல்லை. இதனால், மியூச்சுவல் பண்ட்களில் முதலீடுகள் வெளியேறுவதும், திடீரென முதலீடுகள் அதிகரிப்பதுமாக உள்ளது. இதுதவிர, கடன் பத்திரங்களிலும் அவர்கள் முதலீடு செய்யலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால்,பெரும்பாலான முதியவர்கள் துணிகர முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவதில்லை என்பதால், பணத்தின் பாதுகாப்பு கருதி வங்கி பிச்சட் டெபாசிட்களிலேயே பணத்தை வைத்து விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ | வயதான பெற்றோருக்கு மருத்துவ காப்பீடு… கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன..!!!!

More Stories

Trending News