இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி!! பாஜக காங்கிரஸ் இடையே சம போட்டி

இன்று மக்களவை தொகுதி மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : May 31, 2018, 10:13 AM IST
இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி!! பாஜக காங்கிரஸ் இடையே சம போட்டி title=

நான்கு மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை, சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

 


தொடங்கியது வாக்கு எண்ணிக்கை. வெற்றி பெறுவது யார் என்று இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

 

 

 


கடந்த 28 ஆம் தேதி மக்களவை தொகுதிகளான உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து போன்ற நான்கு தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலஸ் கடேகோன், உத்தர பிரதேசத்தில் உள்ள நூர்பூர், பீகாரில் உள்ள ஜோகிஹாத், ஜார்கண்டில் உள்ள கோமியா, சில்லி, கேரளாவில் உள்ள செங்கனூர், மேகாலயாவில் உள்ள அம்பாதி, பஞ்சாபில் உள்ள சாகோட், உத்தரகண்டில் உள்ள தாரளி, மேற்கு வங்கத்தில் உள்ள மகேஷ்தலா, கர்நாடகவில் உள்ள ஆர்.ஆர். நகர் ஆகிய பத்து சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இன்று இந்த 14 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் ஆரம்பம் ஆகும்.

முன்னதாக, இதில் குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தின் மக்களவை தொகுதியான கைரானா மற்றும் சட்டசபை தொகுதியான நூர்பூர் பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் 25 சதவீதம் முறையாக செயல்பட வில்லை எனவும், அதில் முறைகேடு செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. 

பின்னர் தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவதுல்-

பொதுவாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகும் போது அவற்றுக்கு மாற்றாக வேறு எந்திரங்கள் பொருத்தப்படுவது வழக்கம். அதற்காக வாக்கு பதிவு நடைபெறும் இடங்களில் 25 சதவீத வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக இருப்பு வைக்கப்படும். ஒருவேளை வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதாகி விட்டால், கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு உடனடியாக சரி செய்யப்படும். அதுபோல தான் உத்தர பிரதேச மாநிலத்திலும் நடைபெற்றது. எனவே கைரானா மற்றும் நூர்பூர் தொகுதி குறித்து வைக்கப்படும் குற்றச்சாற்று மிகைப்படுத்தப்பட்டவை என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Trending News