விரைவில், சென்னை ரயில் நிலையங்களில் வருகிறது இந்த வசதி!

சென்னை புறநகர் ரயில் நிலையங்கள் அனைத்திலும் திண்பன்ட கடைகள் திறக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது!

Last Updated : Mar 14, 2018, 01:47 PM IST
விரைவில், சென்னை ரயில் நிலையங்களில் வருகிறது இந்த வசதி! title=

சென்னை புறநகர் ரயில் நிலையங்கள் அனைத்திலும் திண்பன்ட கடைகள் திறக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது!

தினமும் பல லட்சம் பயணிகள் பயணம் செய்து வரும் பெறுநகரங்களில் ஒன்றான சென்னையில் சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு வரையிலும், சென்ட்ரல் - திருவள்ளூர், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயில் சேவையினை வழங்கி வருகிறது தெற்கு ரயில்வே.

இந்த வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையம் ஒருசிலவற்றிலேயே பொதுமக்கள், பயணிகள் வசதிகாக நொறுக்கு தீனி மற்றும் சிறிய வகை உணவு கடைகள், தெற்கு ரயில்வே மூலம் ஏலம் விடப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

எனினும் பெரும்பாலான ரயில் நிலையங்களில் இத்தகு கடைகள் இருப்பதில்லை, இதனால் மக்கள் பெரிதும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சணைகளை சரிசெய்யும் விதமாக அனைத்து புறநகர் ரெயில் நிலையங்களில் புதிதாக உணவக கடைகள் திறக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை புறநகர் ரயில் நிலையம், பறக்கும் ரயில் நிலையம் என 100 ரயில் நிலையங்களில் புதிய உணவக கடைகள் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

இன்னும் ஒருசில மாதங்களில் இக்கடைகள் தொடங்கப்பட்டு விடும் எனவும், இதற்கான டெண்டர் விடும் பணி நடைபெற்று வருகின்றது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூடிய விரைவில் இந்த வசதிமூலம் பொதுமக்கள் பயனடைவர் எனவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

Trending News