#CauveryIssue: மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!

மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்கவுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு 2000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்! 

Last Updated : Apr 29, 2018, 05:10 PM IST
#CauveryIssue: மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!  title=

மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்கவுள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கு 2000 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இதனையடுத்து அரசின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் மெரீனா போராட்டத்திற்கு மீண்டும் தடை விதித்தது. இந்நிலையில் மெரினாவில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வந்ததை அடுத்து தற்போது அங்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மெரினாவில் 2 இணை ஆணையர்கள், 11 துணை ஆணையர்கள் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி யாரேனும் போராட்டத்தில் ஈடுப்பட்டால் கைதுசெய்யப்படுவர் என்று காவல் துறை எச்சரித்துள்ளது....!

Trending News