ராசிபலன்: மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும் நாள் இன்று...

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்...

Last Updated : Nov 26, 2019, 07:46 AM IST
ராசிபலன்: மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும் நாள் இன்று... title=

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்...

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும். குடும்ப அந்தரங்க விஷ யங்களை வெளிநபர்களிடம், பகிர்ந்து கொள்ள வேண்டாம். சாலைகளை கவனமாகக் கடந்து செல்லுங்கள். உத்தி யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்: பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக் கும். வியா பாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்: பணப்புழக்கம் அதி கரிக்கும். உறவினர்கள், நண் பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்புவரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வார்கள். அமைதியான நாள்.

கடகம்:  வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளை களின் திறமைகளை கண்டறிவீர் கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத் தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நன வாகும் நாள்.

சிம்மம்: பிரியமானவர்களின் சந் திப்பு நிகழும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில், சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி: தைரியமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பீர்கள். அதி காரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களைத் திட்டுவீர்கள். உத்தி யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

துலாம்: கணவன், மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். பொரு ளாதார நிலை உயரும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.  வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உற் சாகமான நாள்.

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமைகள் இருக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாகச் செல்லவும். சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து  செயல்பட வேண்டிய நாள்.

தனுசு: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். உடன் பிறந்தவர்களால், அலைச்சல், வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம்  வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

மகரம்: சின்ன, சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புக ளையும் பயன்படுத்தி கொள்வீர் கள். பெற்றோரின் ஆதரவு பெரு கும். பழைய  கடனில் ஒரு பகுதியை கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவ ணங்கள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். நல்லன நடக்கும் நாள்.

கும்பம்:  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள், உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந் திப்பு நிகழும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி, துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகளால்,ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. மனசாட்சிபடி செயல்படும் நாள்

Trending News