இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும், உங்கள் அதிர்ஷ்ட நிறம் என்ன? அதிர்ஷ்ட எண் என்ன? பார்க்கலாம்......
மேஷம்: குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். சிக்கனமாகச் செலவழித்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டாரம் விரிவடையும். அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். மகிழ்ச்சிபெருகும்நாள்.
ரிஷபம்: எதிர்ப்புகளை தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய வேலை வாய்ப்புக்காக முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள்உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதிநிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
மிதுனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம்உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் பழையசரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.
கடகம்: கணவன் மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதிய நண்பர்களால்ஆதாயம் உண்டு.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால், சில விமர்சனங்களுக்கும், கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும், யாரிடமும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காகச் சொல்லக் கூடிய சில கருத்துக்கள்கூட விபரீதமாக மாறவாய்ப்பு இருக்கிறது. உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்னைகளைச் சந்திப்பீர்கள்.
கன்னி: உங்கள் செயல்பாடுகளில் வீண் அலைச்சல்களும், தடைகளும் வந்து நீங்கும். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டங்கள் உருவாகும். தடைகளைத்தாண்டி முன்னேறும்நாள்.
துலாம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் எண்ணங்களை சாதித்துக்கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.
விருச்சிகம்: உங்கள் தவறுகளை சரியான முறையில் கண்டுபிடித்து அதன் வழியில் முன்னேறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில விஷயங்களை விட்டுக்கொடுப்பீர்கள். உத்தி யோகத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு உண்டாகும்.
தனுசு: கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். தடைப்பட்ட காரியங்கள் உடனே முடியும். வரவேண்டிய பணம் கைக்குவந்து சேரும். உறவினர்கள் உங்களைப்புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நன்மை நடக்கும்நாள்.
மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். அதிகவேலைச் சுமையில் அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண்வாதங்கள்வந்து போகும். வியாபாரத்தில் லாபம்மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மனக்கசப்புகள் உண்டாகும். சகிப்புத்தன்மை தேவைப்படும்நாள்.
கும்பம்: கடினமான காரியங்களையும் எளிதாகமுடிப்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் நிறைவேறும். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புதியயுக்திகளால் நல்லலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் அன்பும், ஆதரவு கிடைக்கும். திறமைகள் வெளிப்படும்நாள்.
மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்துசேரும். வெற்றி பெரும்நாள்