இன்றைய (26-08-2017) நாள் எப்படி!! உங்கள் ராசிபலன்!!

Last Updated : Aug 26, 2017, 11:01 AM IST
இன்றைய (26-08-2017) நாள் எப்படி!! உங்கள் ராசிபலன்!! title=

மேஷம்:
இன்று குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்:
இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்:
இன்று தடை தாமதம் ஏற்படலாம். கூடுதல் கவனத்துடன் இருப்பதும் புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் நல்லது. உடல் ஆரோக்கியம் உண்டாகும். செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

கடகம்:
இன்று அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

சிம்மம்:
இன்று வியாபாரிகள் சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

கன்னி:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

துலாம்:
இன்று ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்கள் கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

விருச்சிகம்:
இன்று எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

தனுசு:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை வாரத்தின் பிற்பகுதியில் செய்வது நல்ல பலன் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மகரம்:
இன்று குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்திசாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்:
இன்று முயற்சிகள் சாதகமான பலன்தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையை தவிர்ப்பது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மீனம்:
இன்று எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். உங்களது கருத்துக்கு மற்றவர்களிடம் வரவேற்பு இருக்கும். பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகமும், தைரியமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Trending News