சபரிமலையில் நடை திறப்பு! பாதுகாப்புக்கு 1,500 போலீசார் குவிப்பு!

சபரிமலை கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Last Updated : Oct 17, 2018, 09:38 AM IST
சபரிமலையில் நடை திறப்பு! பாதுகாப்புக்கு 1,500 போலீசார் குவிப்பு! title=

சபரிமலை கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

கேரள மாநிலத்தின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் வரலாற்று தீர்ப்பினை வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் ஆண்கள் மட்டுமின்றி ஏராளமான பெண்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் ஐப்பசி மாத புஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. வரும் 22ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்திருக்கும். கோவிலுக்கு பெண்கள் வருவதை தடுக்க நிலக்கல் பகுதியில் ஏராளமான போராட்டக்காரர்கள்  குவிந்துள்ளனர். 

இந்நிலையில் நிலக்கல் மற்றும் பம்பையில், 800 ஆண் போலீசாரும், 200 பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலக்கல்லில் போலீசார் தடியடி நடத்தி 4 பேரை கைது செய்தனர். சபரிமலை சன்னிதானம் பகுதியில், 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

 

 

 

Trending News