இன்று சனிப்பெயர்ச்சி விழா!!

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு கிரகம் இடம் பெயர்தலை தான் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. 

Last Updated : Dec 19, 2017, 08:09 AM IST
இன்று சனிப்பெயர்ச்சி விழா!!  title=

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு கிரகம் இடம் பெயர்தலை தான் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. 

சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெறுவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம். 

இந்த சனிபெயர்ச்சி தற்போது விருச்சிகம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு நிகழ இருக்கிறது.

> ஏழரைச் சனி என்பது ஒரு ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும். அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5 வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். 

> சனி பெயர்ச்சி மற்றும் ஏழரை சனி, கர்ம சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டக சனி, கண்டக சனி என எல்லாவித சனியினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கும் மிக எளிய பரிகாரங்கள் உள்ளன.

இந்நிலையில் இன்று விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகிறது. இதனையொட்டி இன்று சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். 

Trending News