டெல்லி IIT மாணவர் மர்மமான முறையில் மரணம்!

டெல்லி IIT மாணவர் ஒருவர் தனது விடுதியரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்!

Last Updated : Apr 13, 2018, 06:17 PM IST
டெல்லி IIT மாணவர் மர்மமான முறையில் மரணம்! title=

புதுடெல்லி: டெல்லி IIT மாணவர் ஒருவர் தனது விடுதியரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்!

புதுடெல்லி IIT-ல் முதுகலை வேதியியல் பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் கோபால் மாலோ(21). மேற்கு வங்களத்தை சேர்ந்த சமட் மாலோ என்பவரின் மகனான இவர் டெல்லி IIT நீல்கிரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றார்.

இந்நிலையில் இன்று காலை இவரது அரையில் இருக்கும் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். முன்னதாக கடந்த 10-ஆம் தேதி தூக்க மாத்திரை உண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்., பின்னர் சப்தர்ஜூங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் காப்பாற்றப்பட்டார்.

இதனையடுத்து அவரது சகோதரர் பாட்சோ இவருடன் விடுதியில் தங்கியுள்ளார், எனினும் தற்போது மீண்டும் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுவரையிலும் இவரது தற்கொலைக்கான காரணம் மர்மமாகவே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதே மாதத்தின் முற்பகுதியில் மற்றொரு மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டது குறிப்பிட்டத்தக்கது! 

Trending News