#CauveryIssue: ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்!!

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க., கூட்டணி கட்சிகள், சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகின்றன.

Last Updated : Apr 16, 2018, 06:39 AM IST
#CauveryIssue: ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்!!  title=

காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்காததை கண்டித்து, தமிழக அரசியல் கட்சிகள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ராணுவ கண்காட்சியை துவக்கிவைக்க, ஏப்., 12ல் சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கறுப்பு கொடி போராட்டம் நடத்தின.

இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில், காவிரி மீட்பு பயணத்தை முடித்த, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன், ஏப்., 13ல், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து பேச, ஏற்பாடு செய்கிறேன்' என, ஸ்டாலினிடம் கவர்னர் உறுதி அளித்தார்.

இதனையடுத்து, டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 127-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நேற்று முன்தினம் மரியாதை செலுத்தினர்.

அந்தவகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக செயல் தலைவர் MK ஸ்டாலின் அவர்களும் மரியாதை செலுத்தினார். அத்தருணத்தில் அவருடன் திருநாவுக்கரசர், முத்தரசன், திருமாவளவன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோரும் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் இது குறுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

காவிரி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து 16-ஆம் தேதி மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளோம் என்றார்.
அதன்படி, இன்று காலை, தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடக்கிறது.  ஆர்ப்பாட்டம் முடிந்ததும், மாலை, 5:00 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும், ஆலோசனை கூட்டம் நடக்கிறது. 

இந்த கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர், ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர், காதர்மொய்தீன் மற்றும் கம்யூ., மாநில செயலர்கள் உட்பட, ஒன்பது கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அப்போது, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், பிரதமரை சந்தித்து பேச கவர்னர் அனுமதி பெற்றுத்தராவிட்டால், அடுத்த கட்டமாக எந்த மாதிரியான போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட உள்ளது. 

Trending News