வரும் டிசம்பர் 5-ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் 15 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிட மேலும் 7 வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
"கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் பெயர்களுக்கு இடைக்கால காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் புதுடெல்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையின் படி ஜி.பி. மங்கசூலி (அதானி), பி.ஏ.ககே (காக்வாட்), லக்கா ஜர்கிஹோலி (கோகக்), வெங்கட்ராவ் கோர்பேட் (விஜயநகர), ரிஸ்வான் அர்ஷத் (சிவாஜினகர), பி.நாகராஜ் (யஷ்வந்தபுரா) மற்றும் கே.பி. சந்திரசேகர் (கே.ஆர். பெட்) ஆகியோரது பெயர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி கட்சி மற்ற எட்டு சட்டமன்ற பிரிவுகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. அவை: பீம்மண்ண நாயக் (யெல்லாப்பூர்), பி.எச். பன்னிகோட் (ஹைரேகூர்), கே.பி. கோலிவாட் (ரன்னெபென்னூர்), எம்.அஞ்சனப்பா (சிக்கபல்லாபூர்), எம். சிவராஜ் (மகாலட்சுமி லேஅவுட்), பத்மாவதி சுரேஷ் (ஹோஸ்கோட்), ஹெச்.பி மஞ்சுநாத் (ஹுன்சூர்).
முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் காங்கிரஸ்-JD(S) கூட்டணியில் இருந்த 13 MLA-க்கள் தங்களது கிளர்ச்சின் பின் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். குறிப்பிடத்தக்க வகையில், காங்கிரஸ்-JD(S) கிளர்ச்சி MLA-க்களில் 17 பேரில் 15 பேர் பெங்களூரில் முதலமைச்சர் BS எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 MLA-க்களில், MDB நாகராஜ் ஏற்கனவே பாஜகவில் உறுப்பினராக உள்ளார், ரோஷன் பேக் பாஜகவில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் கர்நாடக சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமாரின், 17 கிளர்ச்சி காங்கிரஸ்-JD(S) MLA-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் கிளர்ச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆண்டு ஜூலை மாதம் பதவி விலகல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் 2023-ஆம் ஆண்டில் முடிவடையும் தற்போதைய சட்டசபையின் காலத்திற்கு தேர்தலில் போட்டியிட சபாநாயகர் தடை விதித்திருந்தார்.
இதனையடுத்து அதிருப்தி அடைந்த MLA-க்கள் தங்களது தகுதிநீக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினர். சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிராக அவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது கிளர்ச்சி MLA-க்கள் தேர்தலில் போட்டியிடலாம் என உச்சநிதீமன்றம் அறிவித்துள்ள நிலையில் எதிர்வரும் இடைத்தேர்தலில் தகுகி நீக்கம் செய்யப்பட்ட MLA-க்கள் பாஜக சார்பில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜே.டி (எஸ்) மற்றும் பாஜக இருவரும் தங்கள் முதல் வேட்பாளர்களின் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட பின்னர் காங்கிரசிலிருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தற்செயலாக, ரோஷன் பேக் தவிர அனைத்து கிளர்ச்சி எம்.எல்.ஏக்களும் புதன்கிழமை முதல்வரும் முன்னாள் மாநிலத் தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா முன்னிலையில் பாஜக-வில் இணைந்தனர். இந்த கிளர்ச்சியாளர்களில் 13 பேருக்கு பாஜக 13 இடங்களை ஒதுக்கியுள்ளது, இன்னும் 2 இடங்களில் தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.