வங்கிப் பணி சார்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் கிளார்க் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ள வங்கியின் பெயர் நைனிடால் வங்கி. 50 கிளார்க் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக தெரிவித்துள்ளது.
50 விழுக்காடு மதிப்பெண்களுடன் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், கூடுதலாக கணிணிப் பயிற்சி முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணபிக்க தகுதியானவர்கள். அடிப்படை உதியம் 17,900 முதல் 47, 920 ரூபாய் வரை கிடைக்கும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 வயது முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு தளர்வு குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், www.nainitalbank.co.in என்ற அதிகாரப்பூர்வ தளத்துக்கு சென்று கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி நாளை என்பதால், காலம் தாழ்த்தாமல் உடனே விண்ணப்பியுங்கள்.
வங்கியின் பெயர் - நைனிடால் வங்கி
பணி: Clerk
காலியிடங்கள்: 50
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், கணினியில் பணி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.17,900 - 47,920 (மாதந்தோறும்)
வயதுவரம்பு: 21 - 30
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nainitalbank.co.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.02.2022
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR