தமிழக மாணவியுடன் போனில் உரையாடிய பிரதமர் மோடி....யார் அந்த மாணவி

உரையாடலின் போது, ​​பிரதமர் வினயக்கிடம் எத்தனை மாநிலங்கள் பயணம் செய்துள்ளார் என்று கேட்டார். இதற்கு மாணவர், 'கேரளா மற்றும் தமிழ்நாடு மட்டுமே' என்றார்.

Last Updated : Jul 27, 2020, 10:16 AM IST
தமிழக மாணவியுடன் போனில் உரையாடிய பிரதமர் மோடி....யார் அந்த மாணவி title=

நாமக்கல்லில் பரமத்தி சாலையில் உள்ள இ.பி.காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு சிவானி, கனிகா என்ற 2 மகள்கள் உள்ளனர். நாமக்கல் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி கனிகா நடந்து முடிந்த தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். 

 

ALSO READ | சமூக வலைதளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம்: மோடி

இந்த நிலையில் நேற்று வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, லாரி டிரைவர் நடராஜனின் மகள் கனிகாவுக்கு பாராட்டு தெரிவித்தார். 

உரையாடலின் தொகுப்பு:

பிரதமர்: கனிகா ஜி வணக்கம்... எப்படி இருக்கிறீர்கள்?

கனிகா : வணக்கம் சார்... நன்றாக இருக்கிறேன்.

பிரதமர்: தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, வெற்றி பெற்றதற்கு முதலில் பாராட்டுகளை தெரிவிக்கிறேன்.

கனிகா:- நன்றி சார். 

மோடி:- நாமக்கல் பெயரை கேட்டவுடன், எனக்கு ஆஞ்சநேயர் கோவில்தான் நினைவுக்கு வரும். இனிமேல், உங்களுடன் பேசியதும் நினைவுக்கு வரும். உங்கள் குடும்பத்தினர், ஆசிரியர் மனநிலை எப்படி இருந்தது?

கனிகா:- மிகவும் சந்தோஷப்பட்டனர். பெருமைப்பட்டனர்.

மோடி:- உங்கள் எதிர்கால திட்டம்?

கனிகா:- டாக்டராக விரும்புகிறேன், சார்.

மோடி:- உங்கள் பெற்றோரும் மருத்துவ துறையில் இருக்கிறார்களா?

 

ALSO READ | நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும்: மாநிலங்களவை எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

கனிகா:- இல்லை சார். அப்பா, ஒரு டிரைவர். என் அக்காள்தான் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருக்கிறார்.

மோடி:- உங்கள் அப்பா நல்ல காரியம் செய்திருக்கிறார். அவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

Trending News