பிளஸ் 2 இறுதி நாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று மறுதேர்வு

கடந்த மார்ச் 24-ம் தேதி நடந்த 12ம் வகுப்பு தேர்வை எழுத முடியாதவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெற உள்ளது.

Last Updated : Jul 27, 2020, 08:23 AM IST
    1. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடக்க இருக்கிறது.
    2. நாளை (செவ்வாய்க்கிழமை) மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி
    3. இந்த தேர்வில் இறுதிநாள் (மார்ச் 24-ந்தேதி) தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் சிலர் பங்குபெறமுடியவில்லை
பிளஸ் 2 இறுதி நாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று மறுதேர்வு title=

பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் இறுதிநாள் (மார்ச் 24-ந்தேதி) தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் சிலர் பங்குபெறமுடியவில்லை என்ற தகவல் வெளியானது.

தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு பிறப்பித்தார். 

 

ALSO READ | ஜூலை 24 முதல் 30 வரை மாணவர்கள் மதிப்பெண் பட்டியல் வாங்க பள்ளிகளுக்கு செல்ல அனுமதி

அதன்படி இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று (ஜூலை 27) மறுதேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஹால்டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ ஜூலை 17 வரை கொடுக்கபட்டது. 

மேலும் தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர் எவராவது இருப்பின் அவர்கள் தேர்வு மையங்களில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்" இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதவில்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மட்டுமே மறுதேர்வை எழுத இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

ALSO READ | ஆகஸ்ட் 3 பள்ளி மாணவர் சேர்க்கை கிடையாது.. வெளியான செய்தி தவறு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

நாளை (செவ்வாய்க்கிழமை) மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், அதன் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News