செப்டம்பர் 21 முதல் 30 வரை இளங்கலை இறுதி செமஸ்டர் (Final Semester) தேர்வுகளை நடத்த, பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகளையும் தயார் நிலையில் இருக்குமாறு மெட்ராஸ் பல்கலைக்கழகம் (University of Madras) கேட்டுக் கொண்டுள்ளது. மெட்ராஸ் பல்கலைக்கழகம், இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளை நடத்துவதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. பிராக்டிகல் தேர்வுகளை (Practival Exams) எப்போது நடத்த வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட துறைகள் தீர்மானிக்கலாம். மற்ற பாடங்களில் தேர்ச்சி பெற்று ஆறாவது செமஸ்டரில் மட்டும் அரியர் உள்ள மாணவர்களும் அரியர் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் ஒருவர் தெரிவித்தார்.
சுற்றறிக்கையின்படி, மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு ஆஃப்லைனில் வழக்கமான முறையிலும், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைனிலும் தேர்வு நடத்தப்படும்.
குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மாணவர்களுக்கும் ஆன்லைனில் தேர்வு எழுதுவதற்கான வசதி வழங்கப்படும். ஆன்லைனில் தேர்வு எழுத, மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னர் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலமாகவோ ஆதாரத்துடன் எழுத்துப்பூர்வமான கோரிக்கையை துறைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
பாடநெறிப் பணிகளை முடித்த, ஆனால் இறுதி செமஸ்டரில் அரியர் உள்ள மாணவர்களுக்கான தேர்வுகள் மாநில அரசிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்ற பின்னர் நடைபெறும் என்று பதிவாளர் சுற்றறிக்கையில் தெரிவித்தார்.
ALSO READ: NEET 2020: ஒரு அறையில் 12 பேர் மட்டுமே அனுமதி, இது போன்ற அம்சங்கள் தேர்வில் காணப்படும்!
வாய்வழி ஆன்லைன் மதிப்பீடுகள் மற்றும் பிராஜெக்டுகளின் மென் நகல்களை மதிப்பீடு செய்து பிராக்டிகல் தேர்வுகளை நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துறை குழுக்கள் தேர்வு அட்டவணையை அமைக்கலாம். தேர்வின் காலம் 90 நிமிடங்கள் முதல் மூன்று மணி நேரம் வரை இருக்கும். வினாத்தாள் முறை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தேர்வுகளுக்கு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். சுற்றறிக்கையின் படி, தேர்வு முடிவுகள் அக்டோபர் 14 க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை அக்டோபர் 16 முதல் 23 வரை பதிவேற்றப்படும்.
செப்டம்பர் 9 ஆம் தேதி பல்கலைக்கழகம் தேர்வு அறிவிப்பை வெளியிடும். ஆன்லைன் முறை தேர்வுக்கான (Online Exams0 கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 16 ஆகும்.
ALSO READ: நீட் 2020: கொரொனாவுக்கு மத்தியில் தேர்வு நடத்த வழிகாட்டுதலை வெளியிட்ட சுகாதார அமைச்சகம்