முதலாம் வகுப்பிலிருந்து அனைத்து மாணவர்களையும் (அடுத்த வகுப்புகளுக்கு) உயர்த்துவதற்கான தேர்வுகளை நடத்தி, அரசாங்கத்தின் வழிகாட்டுதலை மீறுவதற்கும் எதிராக தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கருப்பசாமியின் சுற்றறிக்கையின் படி, சில தனியார் பள்ளிகள், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் அடுத்த வகுப்பிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளன.
1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களையும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்த தமிழக அரசு முன்னதாக ஒரு சுற்றறிக்கை வெளியிருக்கும் நிலையில், சில மெட்ரிகுலேஷன் மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளிகளின் நிர்வாகங்கள் இதை மீற முயற்சிக்கின்றன.
இந்நிலையில் மாணவர்களை தேர்வின் அடிப்படையில் அடுத்த வகுப்பிற்கு அனுப்ப முயற்சிக்கும் பள்ளிகளை எச்சரிக்கும் பொருட்டு அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘வழங்கப்பட்ட அரசு உத்தரவை மீறும் மற்றும் மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நிறுவனத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்’ என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனிடையே ஜூலை 1 முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும், கட்டணம் வசூலித்தல் மற்றும் வகுப்புகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அரசாங்கத்திடம் முன்வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தெரிவிக்கையில்., தமிழ்நாடு நர்சரி, முதன்மை, மெட்ரிகுலேஷன் மற்றும் CBSE பள்ளிகள் சங்கம் தலைமையிலான நிபுணர் குழுவிற்கு அவர்கள் அளித்த பிரதிநிதித்துவத்தில், சமூக தொலைதூர விதிமுறைகளை பராமரிக்க, LKG முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஆறாம் வகுப்பு முதல் வகுப்புகள் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் என இரண்டு பிரிவுகளாக பள்ளிகளை மாற்று நாட்களில் நடத்த விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
மாற்று நாட்களில் வீட்டில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வீட்டுப்பாடங்களையும் முன்மொழிந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் ஒரு வகுப்பு அறைக்கு மாணவர்களின் எண்ணிக்கையை 10 முதல் 15 மாணவர்களாகக் குறைக்க இருப்பதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. விளையாட்டு சுற்றுகள், ஆடிட்டோரியங்கள் மற்றும் பெரிய அரங்குகள் போன்ற திறந்தவெளிகளிலும் வகுப்புகள் நடத்தப்படலாம் என்று சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.