சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பின்னடைவு...

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் இத்தொகுதியில் முன்னிலையை பெற்றுள்ளார்.

Last Updated : May 23, 2019, 10:22 AM IST
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பின்னடைவு... title=

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் இத்தொகுதியில் முன்னிலையை பெற்றுள்ளார்.

17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்றது.

இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன.

தமிழகத்தை பொருத்தவரையில் திமுக - அதிமுக இடையே பலத்த போட்டி காணப்பட்டாலும், டிடிவி தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர், நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் படையெடுப்பு வாக்கு சிதரல்களை ஏற்படுத்தி தேர்தல் கணிப்பில் பெரும் வித்தியாசத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வரை வெளியாகியுள்ள வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி சிதம்பரம் தொகுதியில் பேட்டியிட்ட விடுதலை சிருத்தைகள் கட்சி தலைவர் திருமா பின்னடைவு கண்டுள்ளார். இவர் இத்தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் வசம் பின்னடைவு கண்டுள்ளார்.

Trending News