GOA முன்னாள் முதல்வரின் சட்டமன்ற தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்!!

கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பரிக்கரின் தொகுதியான பனாஜி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி!!

Last Updated : May 23, 2019, 02:43 PM IST
GOA முன்னாள் முதல்வரின் சட்டமன்ற தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்!! title=

கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பரிக்கரின் தொகுதியான பனாஜி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதிலிருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பீகார், உத்திரப்பிரதேசம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், குஜராத், மகாராச்டிரா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதனை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பாஜகவினரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பரிக்கர் மரணத்தை அடுத்து,  பாராளுமன்ற தேர்தலுடன் அவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பனாஜி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தலில் நடந்தது. இந்த இடை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து வேடிவுகள் வெளியானதில், காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் அட்டனாசியோ மான்செராட்டே 8,748 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலியேன்கர் 6,990 வாக்குளை பெற்று தோல்வியை தழுவினார்.

இந்த தோல்வியின் மூலம் சுமார் 25 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த பனாஜி தொகுதியை தற்போது காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. தனது தோல்வியை ஏற்றுக்கொண்ட பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலியேன்கர் பனாஜி தொகுதியை பறிகொடுத்ததற்காக பாஜக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

Trending News