பாஜக, சிவசேனா கூட்டணியின் வெற்றி நிச்சயம்... -பியூஷ் கோயல்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா (பாஜக) மற்றும் சிவசேனா கூட்டணியின் வெற்றி குறித்த நம்பிக்கையை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை வெளிப்படுத்தினார்.

Last Updated : Oct 21, 2019, 10:12 AM IST
பாஜக, சிவசேனா கூட்டணியின் வெற்றி நிச்சயம்... -பியூஷ் கோயல் title=

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா (பாஜக) மற்றும் சிவசேனா கூட்டணியின் வெற்றி குறித்த நம்பிக்கையை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள்கிழமை வெளிப்படுத்தினார்.

நடந்து வரும் வாக்குப்பதிவிற்கு இடையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கோயல், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 225 இடங்களை வெல்லும் என்று நம்புவதாக தெரிவித்தார். அதேநேரத்தில் எதிர்கட்சிகள் நிலைபாடு குறித்து பேசிய அவர்., எதிர்கட்சிகள் தேர்தல் போட்டியிலேயே இல்லை, அவர்கள் மாநிலத்தில் அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டனர் என தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருடன் மக்கள் உள்ளனர் என்றும் பாஜக மூத்த தலைவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கோயல் தெரிவிக்கையில்., "பாஜக-சிவசேனா கூட்டணி 225 இடங்களை வெல்லும் என்று நான் நம்புகிறேன், எதிர்க்கட்சி அனைத்து நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டது, போட்டியின் ஓட்டத்தில் அவர்கள் எங்கும் இல்லை. மக்கள் மோடி ஜி மற்றும் ஃபட்னாவிஸ் ஜி உடன் உள்ளனர்" 

முன்னதாக "எங்கள் ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதற்கும் இந்தியாவின் எதிர்காலத்திற்கு பங்களிப்பதற்கும், ஒரு வாக்கு மிகச் சிறந்த வழியாகும். மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு இந்தியருக்கும் வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் பாதுகாப்பிற்காக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். #BigWinForBJP," என்றும் அவர் ட்வீட் செய்திருந்தார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்களிப்பு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே நடைப்பெற்று வருகிறது. இதனுடன் 17 மாநிலங்களில் 51 சட்டசபை இடங்களிலும், இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும்  இடைத்தேர்தல்கள் நடைப்பெற்று வருகின்றன.

4,400-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் விதி இன்று நிர்ணயிக்கப்படவுள்ளது. ஹரியானாவின் 90 சட்டமன்ற இடங்களுக்கும், மகாராஷ்டிராவின் 288 இடங்களுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்காக, மும்பையில் 40,000 காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக கண்காணிப்புக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படும் என்று மும்பை காவல்துறை முன்பு கூறியிருந்தது. மகாராஷ்டிரா காவல்துறையினர் மாநிலம் முழுவதும் கடுமையான விழிப்புணர்வைக் கடைப்பிடிப்பார்கள், அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் கடமைகளுக்கு பணியாளர்களுடன் மாநில காவலர்கள், CAPF மற்றும் CRPF பாதுகாப்பு படையினர் பணிகளில் ஈடுப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் பாஜக 150 இடங்களில் போட்டியிடுகிறது, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 124 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மீதமுள்ள இடங்கள் சிறிய கட்சிகளுக்கு விடப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (NCP) கூட்டணி காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுகிறது.

Trending News