மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்ற அதே நாளில் ADMK ஆட்சிக்கான இறுதிகட்ட தீர்ப்பு வெளியாகிறது!!
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதிலிருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதேபோல், தமிழகத்தில் திமுக முன்னிலைவகித்து வருகிறது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான DMK ஆட்சியை வீழ்த்தி ஜெயலலிதா நான்காவது முறையாக 2011 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றார். பின்னர், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனித்து போட்டியிட்டது.
அதில், 234 தொகுதிகளிலும் அதிமுகவின் இரட்டை அமோக வெற்றியை நிலைநாட்டியது. 2016, மே 19 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மே 23 ஆம் தேதி ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில் சுமார், 25 ஆண்டுகள் கழித்து ஒரு கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றி பெற்றது என்ற சாதனையைப் படைத்தது. பின்னர், அவருடைய மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக செயல்பட்டுவருகிறது. அதிமுக ஆட்சியின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் 22 எம்.எல்.ஏக்களுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது.
ஜெயலலிதா ஆறாவது முறை முதல்வராக பதவியேற்ற அதேநாளில் அவர் ஏற்படுத்திக் கொடுத்த ஆட்சிக்கான தீர்ப்பு வெளியாகவுள்ளது என்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.