நான் சக்திவாய்ந்தவராக உணருகிறேன்; அனைவரையும் முத்தமிட விரும்புகிறேன்: டிரம்ப்!!

அனைவரையும் முத்தமிட வேண்டும் என ட்ரம்ப் புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பேசியுள்ளார்..!

Last Updated : Oct 13, 2020, 09:25 AM IST
நான் சக்திவாய்ந்தவராக உணருகிறேன்; அனைவரையும் முத்தமிட விரும்புகிறேன்: டிரம்ப்!!

அனைவரையும் முத்தமிட வேண்டும் என ட்ரம்ப் புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பேசியுள்ளார்..!

அமெரிக்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா (Coronavirus) இருந்ததால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு கொரோனா குணமானதாக ட்ரம்ப் மற்றும் மெலனியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 
 
கொரோனா குறித்து ட்ரம்ப் கூறுகயில், கொரோனா கொடியது என்று மக்கள் பயப்பட தேவையில்லை. அது சீசனுக்கு வரும் காய்ச்சல் போன்றது தான் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன் என பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ALSO READ | COVID தடுப்பூசிக்காக காத்திருக்க முடியாது; ஆனால் உயிர்களை காக்க வேண்டும்: WHO 

மேலும் அவர் நான் சக்திவாய்ந்தவராக உணருகிறேன். அனைவரையும் முத்தமிட விரும்புகிறேன் என ட்ரம்ப் புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பேசியுள்ளார். இதை தொடர்ந்து அவர் கூறுகையில், "எனது சொந்த மாநிலமான புளோரிடாவில் நான் மீண்டும் பிரச்சாரத்திற்கு திரும்பி வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் உங்கள் பிரார்த்தனைகளால் மிகவும் உற்சாகமடைந்துள்ளேன். உங்கள் ஆதரவுக்கு நான் தலை வணக்குகிறேன்" என்று அவர் கூறினார். அத்துடன் தற்போது சக்தி வாய்ந்தவனாக உணர்வதாகவும், அனைவரையும் முத்தமிட விரும்புவதாகவும் கூறினார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப், நேற்று தான் கொரோனாவில் இருந்து மீண்டுவிட்டதாகவும் சோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் பிரச்சாரத்திற்கு செல்லப்போவதாகவும் கூறினார். நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலில் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் டிரம்ப், கொரோனா நெகட்டிவ் வந்த ஒரு சில நாளிலேயே தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுள்ளார். இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு முழு நோய் எதிர்ப்பு சக்தி வந்துள்ளதாக கூறும் டிரம்ப் கொரோனா விதிமுறைகளை ஒரு நாள் கூட முறையாக கடைபிடித்தது இல்லை. நெகட்டிவ் வந்த உடனேயே மாஸ்க்கை கழற்றி வீசினார். இந்நிலையில் டிரம்ப் பென்சில்வேனியா, அயோவா, வட கரோலினா மற்றும் விஸ்கான்சினில் தேர்தல் பிரச்சாரத்தை அடுத்தடுத்து மேற்கொள்கிறார்.

More Stories

Trending News