பாஜக கூட்டணி முன்னிலை! பங்குச்சந்தை நிலவரம் இதுதான்!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் பங்குச்சந்தை உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. 

Last Updated : May 23, 2019, 09:53 AM IST
பாஜக கூட்டணி முன்னிலை! பங்குச்சந்தை நிலவரம் இதுதான்! title=

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் பங்குச்சந்தை உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. 

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற 6 மாதத்திற்குப் பிறகு இந்தியப் பங்குச்சந்தை 15 சதவீதம் உயர்ந்திருந்தது. 2019-ம் ஆண்டில் இதுவரையில் இந்தியப் பங்குச்சந்தை குறியீடுகள் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை சென்செக்ஸ் 38,969 புள்ளிகளைத் தொட்டது. 

தற்போது முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை ஏற்றம் பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 654 புள்ளிகளைக் கடந்து 39,764 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகின்றது. 

Trending News