5-வது முறையாக 29 ஆம் தேதி ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்கிறார்!

ஒடிசா மாநிலத்தில் நாளை நடக்க உள்ள பிஜூ ஜனதா தளம் கட்சி கூட்டத்தில் நவீன் பட்நாயக் வரும் 29 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்!!

Last Updated : May 25, 2019, 08:49 PM IST
5-வது முறையாக 29 ஆம் தேதி ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்கிறார்! title=

ஒடிசா மாநிலத்தில் நாளை நடக்க உள்ள பிஜூ ஜனதா தளம் கட்சி கூட்டத்தில் நவீன் பட்நாயக் வரும் 29 ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார்!!

ஒடிசா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 74 எம்எல்ஏக்களே போதுமான நிலையில் சட்டமன்றத் தேர்தலில் பிஜூ ஜனதா தளம் 112 தொகுதிகளில் பெருவாரியாக வெற்றி பெற்று உள்ளது. இந்தநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூடி நவீன் பட்நாயக்கை 5 ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இதேபோல் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பிஜூ ஜனதா தளம் 12 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புதிய அரசு வரும் 29 ஆம் தேதி பதவியேற்கும் என்றும், தொடர்ந்து 5-வது முறையாக நவீன் பட்நாயக் முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் பிஜு ஜனதா தளம் தலைமை இன்று தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்படுகிறார். 

இந்த தேர்தலில் நவீன் பட்நாயக், ஹிஞ்சிலி தொகுதியில் பாஜக வேட்பாளர் பீதாம்பர் ஆச்சார்யாவை 60,160 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஒடிசா முதல்வராக 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக பதவியேற்ற நவீன் பட்நாயக், அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

 

Trending News