நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அக்.,21 பொதுவிடுமுறை அறிவிப்பு..!!

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்.,21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு!!

Last Updated : Oct 17, 2019, 05:38 PM IST
நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அக்.,21 பொதுவிடுமுறை அறிவிப்பு..!!

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அக்.,21 ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு!!

நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு, இந்த இரு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முன்னறிவிப்பின்றி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு, திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள அக்டோபர் 21-ம் தேதி அன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் அரசு மற்றும் தனியார் அலுவலக பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

More Stories

Trending News