என்னப்பா இது நம்ம பவன் கல்யானுக்கு வந்த சோதனை...

ஆந்திர பிரதேச மாநிலத்தில் தனித்து போட்டியிட்ட ஜனசேனா கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்று அக்கட்சி தலைவர் பவன் கல்யானை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

Last Updated : May 23, 2019, 03:34 PM IST
என்னப்பா இது நம்ம பவன் கல்யானுக்கு வந்த சோதனை... title=

ஆந்திர பிரதேச மாநிலத்தில் தனித்து போட்டியிட்ட ஜனசேனா கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்று அக்கட்சி தலைவர் பவன் கல்யானை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் இன்று இரவு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் தற்போது வெளியாகியுள்ள வாக்கு எண்ணிக்கை முடிவுகளை கொண்டு பார்க்கையில் சட்டமன்றத் தேர்தல், மக்களவைத் தேர்தல் இரண்டிலும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பெரும் வெற்றி பெறக்கூடிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி 25 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று ஆட்சியை இழக்கும் நிலையில் உள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மூன்றாவதாக கட்சியாக பவன் கல்யான் தலைமையினாலான ஜனசேனா கட்சி தனித்து களமிறங்கியது. 

கடந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ.க கூட்டணியை ஆதரித்த பவன்கல்யான் இந்தமுறை தனித்து போட்டியிட்டார். குறிப்பிடத் தகுந்த வெற்றி பெறுவார், குறிப்பிட்ட வாக்கு வங்கியை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், அவருடைய கட்சி இந்த தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சட்டமன்றத் தேர்தலில் அவர் இரண்டு தொகுதியில் தொகுதியில் போட்டியிட்டார். மேற்கு கோதாவரியிலுள்ள பீமாவரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் கோதாவரி மாவட்டத்திலுள்ள கஜுவாகா ஆகிய இரு தொகுதிகளில் போட்டிட்டார். 

இந்த இரு தொகுதிகளிலும் அவர் மூன்றாவது இடத்தையே பெற்றுள்ளார். பெரும்பாலான தொகுதிகளில் ஜனசேனா கட்சி வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளையே பெற்றுள்ளனர்.

மாநிலத்தில் தனித்து நின்று மாற்றத்தை கொண்டு வர நினைத்தவருக்கு, சட்டசபையில் கூட இடமில்லாமல் போனது வேதனை... :(

Trending News