பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் வசித்து வருகிறார். இவர்கள் ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம், மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து, புத்தாண்டு அன்று பெங்களூரு நடன நிகழ்ச்சிக்கு தடை விதித்து போராட்டம் நடத்தினர். இவர் தமிழ் சரித்திர படமான வீரமா தேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து, தங்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக நடிகை சன்னி லியோனும் அவரது கணவரும் இரண்டு நாட்கள் முன்னதாக (மார்ச் 5) அறிவித்துள்ளனர். இந்த அழகிய குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என பெயர் சூட்டியுள்ளதாவும் கூறியுள்ளனர்.
நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பதிவில், “திருமண வாழ்க்கையில் குறுகிய காலத்திலேயே மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகப்போகிறோம் என்பதை நானும் டேனியல் வெபரும் ஜூன் 21-ம் தேதிதான் தெரிந்துகொண்டாம்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சன்னிலியோன் தனது வாழ்க்கை பற்றி மன வருத்தத்துடன் பேட்டி ஒன்றில் பேசியது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
சன்னிலியோன் தனது வாழ்க்கை குறித்து பேசியதாவது...!
“எனது பெற்றோர்கள் விரும்பாத திசையில் பயணித்து விட்டேன். இதனால் மக்கள் வெறுப்புக்கு ஆளானேன். நான் இந்தியா வரும் போது தான் இங்குள்ள மக்கள் என்னை விமர்சிக்கவும் எதிர்க்கவும் செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். 21 வயதில் இருந்தே மக்கள் வெறுப்பை நான் சம்பாதித்து வருகிறேன்.
நிறைய இமெயில்களும் கண்டனங்களும் வருகின்றன. மற்ற குடும்பங்களைப் போல் எனது குடும்பத்திலும் பிரச்சினைகள் உள்ளன. எல்லாம் ஒரு காரணத்துக்காக நடந்து இருப்பதாக கருதுகிறேன். எப்படி இருந்தாலும் எனது வாழ்க்கை எனக்கு பிடித்து இருக்கிறது. எனக்கு நேர்ந்த வெறுப்புகளும் எதிர்ப்புகளும் என் குழந்தைகளுக்கு வரக்கூடாது என்று விரும்புகிறேன்” என சன்னிலியோன் கூறினார்.