ப்ளோரிடா: ஷாம்பு பாட்டிலினுள் சிறிய கத்தியை வைத்து கடத்த முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்!
தங்க கட்டிகள், வெள்ளி கட்டிகள், கஞ்சா என கடத்தல் பொருட்களின் தரம் உயர்ந்து வரும் நிலையில் ப்ளோரிடாவை சேர்ந்த முதியவர் ஒருவர் ஷாம்ப்பு பாட்டிலில் சிறய கத்திகளை வைத்து கடத்த முயன்றுள்ளார்.
கோன்ஷாலா கோன்ஷலேஜ் என்ற முதியவர் சார்லோட் _ டக்லஸ் மார்கமாக ப்ளோரிடா சர்வதேச விமான நிலையத்தில் பயணிக்க முயன்ற இவரினை, விமான நிலைய போக்குவரத்து அதிகாரிகள் தடுத்து நிறுத்து பிடித்துள்ளனர்.
விமானங்களில் எரியூட்டகூடிய பொருட்கள், கத்தி போன்ற கூர்மையாக ஆயுதங்கள் எடுத்துச் செல்ல தடை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 72-வயதாகும் இவர் தற்போது ஷாம்ப்பு பாட்டிலில் கத்தி வைத்து பயணித்தன் காரணமாக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் எதற்காக கத்திகளை இவ்வாறு எடுத்துச்சென்றார், கடத்தல் நோக்கத்திற்காக செய்தார் எனில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.