மொபைல் கேமிங் பிரியர்களின் கவணத்தினை ஈர்த்த Fortnite, விரைவில் ஆண்டிராய்ட் இயங்குதளத்திற்கு வெளியாகவுள்ளது!
iOS இயங்குதளங்களில் இயங்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முற்பகுதியில் வெளியான மொபைல் கேம் Fortnite. Epic Game நிறுவனத்தால் உறுவாக்கப்பட்ட இந்த கேம் ஆனது வெளியான குறிகிய காலக்கட்டத்திலேயே ரசிகர்களின் மனதை வென்றது.
இதுவரையில் iOS இயங்குதளத்திற்கு மட்டுமே இருந்த இந்த கேம் ஆனது விரைவில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கும் வரும் என அந்நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் இந்த கோடை விடுமுறைக்கு இந்த கேம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு வெளியாகவுள்ளது.
அதேவேலையில், இந்த கேமில் பல புதிய வசதிகளையும் அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது பயன்படுத்தப்படும் இணைய டேட்டா அளவினை விட குறைவான அளவில் பயன்படுத்தும் வகையில் வசதிகள் சேர்க்கப்படவுள்ளது.
HUD அம்சம் மற்றும் புதிய குரல் ஒருங்கினைப்பு என பல அம்சங்களை இணைக்க Epic Game திட்டமிட்டுள்ளது.
விளையாட்டின் யுக்கிதியில் firing, auto-run போன்ற அம்சத்தினையும் இணைக்கவுள்ளது. முன்பை விட கூடுதல் வசதிகளுடன் Fortnite வெளியாகும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது!