மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெறும் பொதுத்தேர்தல்!

22 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெரும் மலேசியாவில் பொதுத்தேர்தல்!   

Last Updated : May 9, 2018, 12:44 PM IST
மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெறும் பொதுத்தேர்தல்!  title=

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியுள்ள மலேசிய பொதுத்தேர்தல் வாக்குப்பதிவில், பிரதான வேட்பாளர்கள் இருவரும் தங்களது வாக்குக்களை பதிவு செய்தனர். 

 மலேசியா நேரப்படி நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தலைநகர் கோலாலம்பூர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகவும், 222 நடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 12 மாநில சட்டமன்றங்களுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கும் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, பிரதான வேட்பாளர்களான மொஹம்மதும், ரஜாக்கும் தங்களது வாக்குகளை அடுத்தடுத்து பதிவு செய்தனர். கடந்த 22 ஆண்டுகள் மலேசிய பிரதமராக பதவி வகித்தவரும் எதிர்கட்சி வேட்பாளருமான மஹத்திர் மொஹம்மத்திற்கும், தற்போதைய பிரதமரும் ஆளுங்கட்சி வேட்பாளருமான நஜீப் ரஸாக்கிற்கும் இடையே, வெற்றிக்காக கடுமையாக போட்டி நிலவுகிறது. 

இதை தொடர்ந்து, நஜீப் ரஸாக் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பை முறைப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இவருக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 

Trending News