நாடு முழுவதும் உள்ள மக்கள் உகாதி என்னும் புத்தாண்டு தொடக்கத்தை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு, நடிகர் தனுஷ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டு தொடக்கத்தை கொண்டாடி வருகிறார்கள். மஹாராஷ்டிராவில் உள்ள் மக்கள் குடி பத்வா எனும் திரு நாளாக இதனை கொண்டாடுகிறார்கள்.
பிரம்மா இந்த நாளில் பிரபஞ்சத்தை உருவாக்கியதாக நம்பப்படுகிறது. இதுவே இந்த திருவிழாவின் சிறப்பாக கருதப்படுகிறது.
சனமஹிஸம் மதத்தை பின்பற்றுகிற மணிப்பூர் மக்களும் சந்திர புத்தாண்டாக இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் உகாதி என்ற புத்தாண்டை கொண்டாடி வரும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில மக்கள் உகாதி தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ‘‘யுகாதி தின’’ வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது...!
‘‘யுகாதி’’ என்னும் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவரும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த புதிய ஆண்டில் நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், நல்ல ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இந்த புதிய ஆண்டு உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாகவும், வளமானதாகவும் இருக்கும் என்றார்.
I wish you all happiness, positivity and good health in this new year. May this new year be a happy and prosperous one. Andariki Ugadi Subhakankshalu :)#HappyUgadi
— Dhanush (@dhanushkraja) March 18, 2018
நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். வடசென்னை படம் சென்னையில் மீனவர்கள், மற்றும் அந்த சுற்றுச் வட்டார மக்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் அரசியல் தான் கதை என தெரியவந்துள்ளது.
மேலும், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தனுஷ்-ன் வட சென்னை படத்த்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.