30 வயது ஆகிவிட்டதா?... இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க

30 வயதை தொட்டவர்கள் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 5, 2022, 04:22 PM IST
  • தற்போதைய காலத்தில் உணவுகளே விஷமாக மாறும் சூழல் உண்டாகியுள்ளது
  • அதனால் சில உணவுகளை தொடாமல் இருப்பது சிறந்தது
30 வயது ஆகிவிட்டதா?... இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க title=

மனிதர்களின் ஆரோக்கியமும், அவர்களது சராசரி வயதும் தற்காலத்தில் கணிசமாகவே குறைந்துவருகிறது. அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கியமானது உணவு முறை ஆகும். 

முன்னொரு காலத்தில் 80 வயதுவரை ஆரோக்கியமாக பலர் இருக்க தற்போது 30 வயது தொட்டவர்களுக்கே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் உள்ளிட்டவைகள் வந்துவிடுகின்றன. இதனால் 30 வயதை தொட்டவர்கள் அல்லது அதை கடந்தவர்கள் சில உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது.

மேலும் படிக்க | 40 வயது ஆகிவிட்டதா? அப்போ இதையெல்லாம் கண்டிப்பா ஃபாலோ பண்ணியே ஆகணும்!

சுகர் ஃப்ரீ உணவுகள்: 

இந்த வகை உணவுப் பொருள்களில் சுவைக்காக செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்த சுவையூட்டிகள் உடலில் டாக்ஸின்களை அதிகரித்து, கல்லீரல் செயல்பாட்டுக்கு நெருக்கடியைத் தரும்.

டயட் சோடா: 

டயட் சோடாக்கள் குடித்தால், அது தைராய்டு ஹார்மோன்கள் மற்றும் கருவளத்தைப் பாதிக்கும். மேலும் இந்த பானங்களில் உள்ள BVO எனும் பொருள் நமது உடலுக்கு அழற்சியை கொடுத்து உடல் பருமனை அதிகரிக்க செய்யும்.

மேலும் படிக்க | இந்த மந்திர பழத்தில் இத்தனை மருத்துவ குணம் நிறைந்துள்ளதா, அற்புதம்

பாப்கார்ன்: 

பாப்கார்ன்களில் பல செயற்கை சுவையூட்டிகளை சேர்த்து பாக்கெட் போட்டு விற்கின்றனர். மேலும் சினிமா தியேட்டர்களில் விற்கப்படும் பாப்கார்னில், ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உள்ளன. இவை இதய நோயின் அபாயத்தை அதிகரிப்பவை.

சோயா சாஸ்: 

சோயா சாஸில் ஏராளமான அளவில் சோடியம் நிறைந்துள்ளது. ஒரு தேக்கரண்டி சோயா சாஸில் 879 மில்லிகிராம் சோடியம் நிறைந்துள்ளது. ஆகவே சோயா சாஸ் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

கேன் சூப்: 

கேன் சூப்புகளில் பதப்படுத்தும் பொருள்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் உப்பு போன்றவை ஏராளம் இருப்பதால், அதில் உள்ள சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோயை உருவாக்கும்.

மேலும் படிக்க | மூளை புற்றுநோயின் 7 சைலண்ட் அறிகுறிகள்: தொடர்ந்து தலைவலிக்கிறதா? கவனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News