உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கா? இந்த உணவுகளை கண்டிப்பா தவிர்க்கவும்!

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மேலும் சில உணவுகளை சாப்பிடாமல் இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.  

Written by - RK Spark | Last Updated : Mar 24, 2024, 06:30 AM IST
  • வறுத்த இறைச்சிகளை தவிர்க்க வேண்டும்.
  • சக்கரை பானங்களை தவிர்ப்பது நல்லது.
  • உப்பு அதிகம் சேர்த்து கொள்வதை தவிர்க்கவும்.
உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கா? இந்த உணவுகளை கண்டிப்பா தவிர்க்கவும்! title=

உயர் இரத்த அழுத்தம் என்பது உடலின் தமனிகளை பாதிக்கும் ஒரு பொதுவான நோய் ஆகும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தமனி சுவர்களுக்கு எதிராக இரத்தத்தின் விசை தொடர்ந்து அதிகமாக இருக்கும். இதனால் இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் கடினமாக உழைக்க வேண்டும். உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், உங்களின் இருதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.  இருப்பினும், இவற்றை பின்பற்றும் முன்பு உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் கேட்பது நல்லது.

மேலும் படிக்க | 40 வயசு பெண்ணா? 20 வயசு அழகியா மாற இந்த கால்சியம் உணவுகளை சேர்த்துக்கோங்க!

டெலி இறைச்சி

டெலி இறைச்சி பெரும்பாலும் அதிகமாக மதிய உணவாக சாப்பிடப்படுகிறது.  அதில் உள்ள அதிக உப்பு உள்ளடக்கம் உங்கள் இரத்த அழுத்தத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. அதிக உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்துடன் நேரடியாக தொடர்புடையது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உங்கள் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் மற்றும் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.  அதே போல பதப்படுத்தப்பட்ட சூப்களை தவிர்ப்பது நல்லது.  உதாரணமாக, வெறும் அரை கப் பேக் செய்யப்பட்ட சிக்கன் நூடுல் சூப்பில் 890 மி.கி உப்பு உள்ளது. 

கொழுப்பு உணவுகள்

கொழுப்பு, உப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.  உதாரணமாக நீள்க பன்றி இறைச்சி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்படலாம்.  மேலும், உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இல்லாவிட்டாலும், பன்றி இறைச்சியை குறைக்க வேண்டும். ஏனெனில் இவை சில புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சீஸ்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் உள்ள அதிக அளவு சோடியம் காரணமாக உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.  அதே போல சாஸ்களில் 400 மி.கி அதிகமான அளவில் சோடியம் சேர்க்கப்படுகிறது.  

சர்க்கரை-இனிப்பு பானங்கள்

சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் எடை அதிகரிப்பிற்கு மட்டுமல்லாமல், அவை உங்கள் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க செய்கின்றன. கணிசமான அளவு சர்க்கரை-இனிப்பு பானங்களை குடிப்பவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆய்வு தெரிவிக்கிறது. நீங்கள் உயர் இரத்த அழுத்தம் உள்ளவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நீரேற்றத்துடன் இருப்பதற்கு தண்ணீர் குடிப்பது நல்லது.  மது அருந்துவது இதய நோய்க்கான குறைந்த அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், முழுவதுமாக தவிர்க்க முடியவில்லை என்றாலும் அடிக்கடி மது குடிப்பதை தவிர்ப்பது நல்லது.  

திராட்சைப்பழம்

உங்களுக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் திராட்சைப்பழத்தை தவிர்ப்பது நல்லது.  இவை தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மற்ற பெரும்பாலான சிட்ரஸ் பழங்களுக்கு இரத்த அழுத்த மருந்துகளுடன் எந்த தொடர்பும் இல்லை. 

காபி 

உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.  மிதமான உயர் இரத்த அழுத்தம் உள்ள 18 முதல் 45 வயதுக்குட்பட்ட பெரியவர்களுக்கு காபி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அதிக காபி குடிப்பவர்கள் சராசரி நபரை விட நான்கு மடங்கு அதிகமாக இதய நோய் ஏற்படுவதாக முடிவுகள் காட்டுகின்றன.

இறைச்சிகள்

வறுக்கப்பட்ட மாட்டிறைச்சி, கோழி அல்லது மீன் ஆகியவற்றை வழக்கமாக சாப்பிடும் நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிக வெப்பநிலையில் இறைச்சியை சமைப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் இரசாயனங்கள் உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்திற்கு வழிவகுக்கும். சமீபத்திய ஆய்வில், உயர் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய பங்களிப்பாக வறுத்த உணவுகளை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். உணவில் அதிக கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளடக்கம் குறிப்பாக இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மேலும் படிக்க | Health Alert: ஹார்ட் அட்டாக் வருவதற்கு ஒரு மாதம் முன்பே வரும் ஹெல்ட் அலர்ட்! கவனமா இருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News