ஜாக்கிரதை! இளைஞர்களை அதிகம் குறிவைக்கும் பெருங்குடல் புற்றுநோய்! அறிகுறிகள் இதான்!

Colon cancer: ஆரோக்கியமில்லாத டயட், உடற்பயிற்சியின்மை, அதிக எடை அல்லது உடல் பருமன் ஆகியவை இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சில காரணங்களாக அமைகிறது.    

Written by - RK Spark | Last Updated : Mar 22, 2023, 05:48 AM IST
  • பெருங்குடல் புற்றுநோய் 2019-ல் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • வயதானவர்களை விடவும் இளைஞர்களையே அதிகம் பெருங்குடல் புற்றுநோய் தாக்குகிறது.
  • உடல் பருமன், உடற்பயிற்சியின்மை பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகிறது.
ஜாக்கிரதை! இளைஞர்களை அதிகம் குறிவைக்கும் பெருங்குடல் புற்றுநோய்! அறிகுறிகள் இதான்!

Colon cancer: பலவகையான புற்றுநோய்கள் மக்களை தாக்கி வருகிறது, புற்றுநோய்கள் வயதானவர்களை மட்டுமல்லாமல் இளம் வயதினரையும் தாக்குகின்றது.  அதில் இளம் வயதினரை அதிகளவில் பெருங்குடல் புற்றுநோய் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது.  பெருங்குடல் புற்றுநோய் பொதுவாக உலகின் பெரும்பாலான நாடுகளில் நான்காவது பொதுவான புற்றுநோயாகும்.  பொதுவாக பெருங்குடல் புற்றுநோய் வயதானவர்களையே அதிகம் தாக்குவதாக பலரும் நம்பி வரும் நிலையில், அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் அறிக்கை வேறுவிதமாக தெரிவித்துள்ளது.  அதாவது 55 வயதிற்குட்பட்ட நபர்களிடையே பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 1995-ல் 11 சதவீதத்திலிருந்து 2019-ல் 20 சதவீதமாக அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  2019 ஆம் ஆண்டில், அனைத்து வயதினரிடையேயும் அனைத்து புதிய பெருங்குடல் நிகழ்வுகளில் 60 சதவீதம் மேம்பட்ட நிலைகளில் இருந்தன. 

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த ஒரு காய்கறி வரப்பிரசாதம்..! கோடையில் சாப்பிடுங்கள் 

வயதானவர்களை காட்டிலும் அதிகளவில் பெருங்குடல் புற்றுநோய் இளைஞர்களுக்கு வருவதற்கு சில காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.  நிபுணர்களின் கூற்றுப்படி, ஆரோக்கியமில்லாத டயட், உடற்பயிற்சியின்மை, அதிக எடை அல்லது உடல் பருமன் ஆகியவை இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சில காரணங்களாக அமைகிறது.  செயற்கையான இனிப்பு சுவையூட்டப்பட்ட இனிப்பு பானங்கள் மற்றும் சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளும் புற்றுநோய்க்கு காரணிகளாக அமைகின்றது.  இந்த புற்றுநோய்க்கு சில சமயம் மரபணுக்களும் ஒரு முக்கியமான காரணமாக அமைகின்றது. மருத்துவர்களின் கூற்றுப்படி, பெருங்குடல் புற்றுநோய்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு நோய்க்கான குடும்ப வரலாற்றுடன் தொடர்புடையது.

இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக பல இளைஞர்கள் நீரிழிவு நோயாலும், உயர் இரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.  பெருங்குடலின் நாள்பட்ட அழற்சி நோய்கள், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி மற்றும் கிரோன் நோய் போன்றவை, பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கலாம்.  செரிமான மண்டலத்தின் இறுதிப் பகுதியான பெருங்குடலில் பெருங்குடல் புற்றுநோய் தொடங்குகிறது, பெருங்குடலின் புறணியில் உள்ள ஆரோக்கியமான செல்கள் சேதமடைந்து கட்டுப்பாடற்ற வளர்ச்சியை அடைவதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய் அபாயம் ஏற்படுகிறது.  புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிந்துவிட்டால் 90 சதவீதம் உயிர்பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்:

1) வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல்.
2) மலத்தின் தன்மையில் மாற்றம்.
3) மலக்குடல் இரத்தப்போக்கு.
4) மலத்தில் இரத்தம்.
5) வாயு போன்ற வயிற்று உபாதைகள்.
6) நாள்பட்ட சோர்வு.
7) திடீர் எடை இழப்பு.

மேலும் படிக்க | எலுமிச்சை பழம் நல்லதுதான்! ஆனால் இந்த பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News