பிளாக் காப்பியும் உடலுக்கு கேடா? - பக்க விளைவுகளை கேட்டாலே பயம் இருக்கே!

Side Effects of Black Coffee: பலரும் மிக ஆரோக்கியமானது என கருதும் பால் இல்லாத கடுங்காப்பியில் (Black Coffee) கூட பல பக்க விளைவுகள் இருக்கிறது. அதுகுறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 10, 2023, 11:15 AM IST
  • புத்துணர்ச்சிக்காக பலரும் கடுங்காப்பியை குடிக்கின்றனர்.
  • கடுங்காப்பியை எளிமையாக செய்யலாம் என்பதாலும் அதிகம் குடிக்கப்படுகிறது.
  • வேலையின்போது வரும் தூக்கத்தை கடுங்காப்பி விரட்டும் என நம்பப்படுகிறது.
பிளாக் காப்பியும் உடலுக்கு கேடா? - பக்க விளைவுகளை கேட்டாலே பயம் இருக்கே! title=

Side Effects of Black Coffee: காலையில் எழுந்தவுடன் பலரும் தங்கள் தினத்தை,  காபி உடன் தொடங்குகிறார்கள். சிலர் பாலுடன் காபி குடிக்க விரும்புவார்கள், சிலரோ பால் இல்லாமல் கடுங்காப்பியை குடிப்பார்கள். வேலை செய்துகொண்டிருக்கும்போது நாம் சோர்வாக உணர்ந்தால், ஒரு கோப்பை காபி நமக்கு புத்துணர்ச்சி அளிப்பது போல் உணர்வோம். 

இது நமது மனநிலையை நன்றாக வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், வேலையின் போது வரும் தூக்கத்தையும் விரட்டுகிறது. பெரும்பாலான மக்கள் கடுங்காப்பி குடிப்பதை மிகவும் ஆரோக்கியமானதாக கருதுகின்றனர். இதை குடிப்பது நன்மையை மட்டுமே தரும், தீங்கை தராது என்றும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். 

கடுங்காப்பி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதால் பல தீமைகள் உள்ளன. அவை உங்களுக்குத் தெரியாது. ஆரோக்கியமான விஷயங்கள் வரம்பிற்குள் உட்கொள்ளும் வரை ஆரோக்கியமாக இருக்கும். காஃபின் (Caffeine) இருப்பதால், கடுங்காப்பி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, கடுங்காப்பியின் பக்க விளைவுகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க | Belly Fat: உணவில் தொடங்கும் எடை குறைப்பு மந்திரம் இரவு கட்டில் வரை தொடரும்

கடுங்காப்பியின் பக்க விளைவுகள்

1. வயிற்றில் பிரச்சனை ஏற்படும்: கடுங்காபியில் காஃபின் மற்றும் அமிலம் நிறைந்துள்ளது. இதை அதிகமாக உட்கொள்வது உங்கள் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும். நீங்கள் வயிறு இருக்கமாக மாறுவதை உணரலாம். இது வயிற்றில் கோளாறு இருப்பதைக் குறிக்கிறது.

2. மன அழுத்தம் மற்றும் பதட்டம்: கடுங்காப்பியை குறைந்த அளவில் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் அதை அதிகமாக உட்கொண்டால், அது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும். அதிகப்படியான கடுங்காப்பி குடிப்பதால், உங்கள் உடலில் அதிக மன அழுத்த ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இது கவலை மற்றும் பதற்றத்தை உருவாக்குகிறது.

3. தூக்கத்திற்கு இடையூறு: அதிகமாக காபி குடிப்பது உங்கள் தூக்க முறையை தொந்தரவு செய்யலாம். நீங்கள் இரவில் நன்றாக தூங்க விரும்பினால், தூங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு காபி சாப்பிட வேண்டாம்.
  
4. ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள முடியாது: அதிக காபி குடிப்பதன் மூலம், உடலுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களை உணவில் இருந்து உறிஞ்ச முடியாது. ஒருவர் தினமும் 400 மில்லிகிராம் காஃபின் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தொப்பையை வேகமாக குறைக்கணுமா? வெல்லத்தை சாப்பிடுங்க, உடனே குறையும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News