சர்க்கரையை விட தேன் சிறந்ததா? ஏன் தெரியுமா?

கலோரி அளவை பொறுத்தவரை 1 ஸ்பூன் தேனில் 20 கலோரிகளும், அதேசமயம் தேனில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 25, 2022, 07:57 PM IST
  • தேன் மற்றும் சர்க்கரையில் பல்வேறு வகைகள் உள்ளது.
  • கலோரி அளவை பொறுத்தவரை 1 ஸ்பூன் தேனில் 20 கலோரிகள் உள்ளது.
  • சளி, இருமல் போன்ற பிரச்சனைக்கு தேன் மாமருந்தாக செயல்படுகிறது.
சர்க்கரையை விட தேன் சிறந்ததா? ஏன் தெரியுமா? title=

தேனும் சரி, சர்க்கரையும் சரி இரண்டுமே பொதுவாக இனிப்பு சுவையை தான் தருகிறது, ஆனால் ஆரோக்கிய ரீதியாக சர்க்கரையை விட தேன் தான் சிறந்தது என்று கூறப்படுகிறது.  தேன் மற்றும் சர்க்கரையில் பல்வேறு வகைகள் உள்ளது, இவை அளவு மற்றும் தரத்திற்கு ஏற்ப விலையில் விற்கப்படுகிறது.  பூக்களிலுள்ள தேன்களை தேனீக்கள் எடுத்து சென்று சேமிக்கும், இதன் மூலமாக தான் நாம் தேனை பெறுகிறோம் மற்றும் சர்க்கரையை கரும்பு சாறிலிருந்து பிரித்தெடுக்கிறோம்.  தேனானது கெட்டியான திரவம் போன்றும், சர்க்கரையானது கிரிஸ்டல் அல்லது பவுடர் போன்றும் இருப்பது நமக்கு தெரியும்.  கலோரி அளவை பொறுத்தவரை 1 ஸ்பூன் தேனில் 20 கலோரிகளும், 1 ஸ்பூன் சர்க்கரையில் 15 கலோரிகளும் உள்ளது, அதேசமயம் தேனில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளது.

மேலும் படிக்க | கடுகு எண்ணெயை முடியில் தடவும்போது இந்த தவறை செய்யாதீர்கள்

சளி, இருமல் போன்ற பிரச்சனைக்கு தேன் மாமருந்தாக செயல்படுகிறது, விளையாட்டு வீரர்களுக்கு உடலுக்கு தேவையான ஆற்றலை தேன் வழங்குகிறது.  மேலும் இது சிறந்த ஆன்டி பயாட்டிக்காகவும் செயல்படுகிறது மற்றும் குடல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்வதோடு முக அழகிற்கும் பலர் தேனை பயன்படுத்துகின்றனர்.  சர்க்கரையில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது, சர்க்கரை சேர்த்துக்கொள்வதால்  உடலில் விரைவில் ப்ரோட்டீன் மற்றும் கொழுப்புசத்து அதிகரிக்கிறது.  தேனில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும் மற்றும் இதனை 1 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

அதிகளவு சர்க்கரை சாப்பிடுபவர்களில் உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் கார்டியா வாஸ்குலார் நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது.  தேன் மற்றும் சர்க்கரை இரண்டுமே இனிப்பு சுவையை தந்தாலும் தேனை விட சர்க்கரையில் உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய காரணிகள் அதிகம் நிறைந்துள்ளது, ஆனால் தேனில் உடலுக்கு நன்மைபயக்கக்கூடிய பல விஷயங்கள் நிறைந்துள்ளது.  அதனால் சர்க்கரையை காட்டிலும் தேனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | Health Alert: முட்டையுடன் சாப்பிடக் கூடாத சில உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News