பொட்டுக்கடலை ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த அற்புத உணவு. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய இந்த உணவில், மிக மிக குறைந்த அளவு கலோரிகளே உள்ளது. இதில் புரோட்டீன்கள் மட்டுமல்லாது, வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம், பொட்டாசியம் ஆஅகியவை நிறைந்துள்ளன. நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன் கொண்டவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினருக்குமே இந்த பொட்டுக்கடலை தரும் நன்மைகள் ஏராளம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொட்டுக்கடலை
குறைந்த கலோரியும் நிறைந்த புரோட்டீனும் கொண்ட உணவாக உள்ளதால், ஒரு கைப்பிடி சாப்பிட்டாலே, வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். இதனால், பசி எடுக்காது. செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் பொட்டுக்கடலை, கெட்ட கொழுப்புக்களை கரைத்து, (Health Tips) இதயத்தையும் பாதுகாக்கிறது. இதிலுள்ள பாஸ்பரஸ் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் போட்டுக்கடலை
கால்சியம் நிறைந்த பொட்டுக்கடலை எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் போன்ற குறைபாடுகளை தடுக்கவும் இந்த பொட்டுக்கடலை உதவுகிறது. 40 வயதிற்கு பிறகு கால்சியம் குறைபாடு ஏற்படுவது இயல்பு. அதிலும், பெண்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதால், பொட்டுக்கடலையை தவறாமல் சேர்த்துக் கொள்வது பலன் தரும்.
மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!
மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும் பொட்டுக்கடலை
மாதவிடாய் நேரத்தில், அதிக ரத்தப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள், ஒரு கைப்பிடி அளவு பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தால், ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். மாத விடாய தொடர்பான பிற பிரச்சனைகளுக்கும் பொட்டுக்கடலை தீர்வைத் தரும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். தினமும், சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் வயிற்று பிரச்சனைகளும் நெருங்காது.
முதுமை நெருங்காமல் இருக்க உதவும் பொட்டுக்கடலை
முகத்திற்கு அழகும் பொலிவும் தரும் ஆற்றல் கொண்டது பொட்டுக்கடலை. படை, சொறி, அரிப்பு போன்ற சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும். தலைமுடி ஆரோக்கியாமாகவும் வலுவாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமானால், பொட்டுக்கடலையை தவறாமல் சேர்த்துக் கொள்ளவும். இளநரை பிரச்சனையும் நீங்கவும் பொட்டுக்கடலை தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். எனவே, முதுமை நெருங்காமல் இருக்க உதவும் பொட்டுக்கடலையை தினமும் சேர்த்துக் கொள்ளவும்.
பொட்டுகடலையை உங்கள் டயட்டில் சேர்ப்பதற்கான சிறந்த வழி பற்றி அறிந்து கொள்ளலாம்
1. காலை அல்லது மாலை பொறித்த உணவுகளை தவிர்த்து அதற்கு பதிலாக பொட்டிக்கடலையை எடுத்துக் கொள்ளலாம். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கு ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை போதும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, ஒரு நாளைக்கு 50 முதல் 60 கிராம் பொட்டுக்கடலையை உட்கொள்ளலாம்.
2. பொட்டுக்கடலையை உருண்டையாகவோ, சத்துமாவாகவோ தயாரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
3. இட்லி தோசை போன்று சிற்றுண்டிகளுக்கு பகக் உணவாக பொட்டுகடலை சட்னியை அடிக்கடி சேர்த்துக் கொள்வதும் பலன் அளிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ